அறிவியல் கோட்பாடுகளும், உருவாக்கமும் வெறும் கண்டுபிடிப்பு என்ற நிறைவோடு முடிந்துவிடுவதில்லை.
வரலாற்றில் ஆதிக்கம் செலுத்துகிறது; நியதிகளை உடைத்தெறிகிறது சமூகத்தில் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
வரலாற்றைச் சுழலவைத்த சக்கரம் முதல் வாழ்வை அச்சுறுத்தும் அணு ஆயுதங்கள் வரை உதாரணங்கள் சொல்லலாம். அந்த வகையில் மனித வாழ்வியல் குறித்த அடுத்த அத்தியாயம் எழுதியவர் சார்லஸ் டார்வின்
டார்வின் புதிய பாதை
19 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கடவுள்தான் மனித இனத்தை படைத்தார் என மக்கள் நம்பினர்.
பிரிட்டனின் இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின் மக்களுக்கு அறிமுகம் ஆகும்வரை எல்லா உயிரினங்களும் ஒரு தெய்வீக சக்தியால் கருத்தரிக்கப்படுகிறது என அனைவரும் நம்பினர்.
டார்வின்தான் முதன் முதலில் மனிதனின் பரிணாம வளர்ச்சி இயற்கையாக நிகழ்கிறது என விளக்கினார்.


மனிதனின் தோற்றம் குறித்து புதிய விளக்கம் அளித்தார். இந்த விளக்கம் தான் வரலாற்றில் டார்வினை முக்கிய விஞ்ஞானி ஆக்கியது.
தனது ஆராய்ச்சியை பரிசோதித்து செம்மைப்படுத்த, 20 ஆண்டுகள் ஆனது. 22 வயதில், தான் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை விட்டுவிட்டு நீண்ட பயணம் மேற்கொண்டார்.
டார்வின் அறிவியல் பயணம்
எச்.எம்.எஸ் பீகிள் என்ற கப்பலில் ஏறி டார்வின் தென் அமெரிக்காவிற்கு பயணித்தார்.
மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து தனக்கு முதல் தடயம் அளித்த தொல்லுயிர் படிவங்களை அங்கு சேகரித்தார்.
டார்வின் கலபகோஸ் தீவுகள் சென்றபோது, பிரம்மாண்ட அளவிலான ஆமைகளை அங்கு கண்டார்.
அந்த ஆமைகள் வெவ்வேறு தீவுகளில், வெவ்வேறு விதமான தனித்துவ பண்புகளோடு விளங்கின.
எங்கெல்லாம் நிறைய உணவு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தனது கழுத்தை சுருக்கிக்கொண்டன. ஆனால், வறண்ட தீவுகளில் நீளமான கழுத்துடன் காணப்பட்டன.
புதிய வகை விலங்குகளை உருவாக்க எப்படி கலப்பினத்தை ஆர்வலர்கள் உருவாக்குகிறார்கள் என்பதை டார்வின் கவனிக்க ஆரம்பித்தார்.
பிழைப்பதற்கு இயற்கையாகவே போராட வேண்டியுள்ளது என்பதை உணர்ந்தார்.
எந்த இனம் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறதோ அந்த இனம் உயிர் வாழ முடியும்.
உயிரினங்களின் வளர்ச்சி
தன்னை மாற்றிக்கொள்ளாத இனம் அடுத்த சந்ததியினரே இல்லாமல் மறைந்து விடுகிறது.
மிகவும் ஆரோக்கியமாக வாழும் உயிரினங்கள் தங்கள் பண்புகளை அடுத்த தலைமுறையினருக்கு கற்பிக்கின்றனர்.
மாற்றத்தால் புதிய இனமாக மாறாத வரை தங்கள் குட்டிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
ஆமைகளில் உள்ள வேறுபாடுகள் பரிணாம வளர்ச்சியின் விளைவாகும்
.


ஒருபுறம் தீவில், நீண்ட கழுத்துடன் உள்ள உயிரினங்கள், உணவுக்காக உயர்ந்த இடம் வரை செல்ல முடியும். மற்றொருபுறம் மிக குறுகிய கழுத்து உள்ள உயிரினங்கள் தரைமட்டத்தில் உள்ள புல் செடிகளை உண்டு, எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள முடியும்.
மேலும் அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான மூதாதையர் இனத்தில் இருந்து உருவானது என டார்வின் கூறுகிறார்.
அப்போதிலிருந்து இந்த கிரகத்தில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை பன்முகத்தன்மை கொண்டதாக அமைந்தது.
டார்வின் 1859ம் ஆண்டு உயிரினங்களின் தோற்றம் குறித்த தனது புத்தகத்தை வெளியிட்டார். அதன் பிறகு அறிவியலுக்கு அப்பாற்பட்ட பிரபலம் ஆனார்.
அவரது கண்டுபிடிப்புகள் பிரிட்டனின் 19 ஆம் நூற்றாண்டின் ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையை உலுக்கியது.
பன்முகத்தன்மை கடவுளிடம் இருந்து வந்தது அல்ல, அறிவியலில் இருந்து வந்தது என விளக்கம் அளித்து மேலும் ஆராய்ச்சி செய்வதற்கான வழியை வகுத்தவர் டார்வின்.
எல்லா உயிரினங்களையும் வைக்கும் அதே தளத்தில் தான் மனிதனையும் டார்வின் வைத்தார்.
அதே சமயத்தில், பரிணாம வளர்ச்சி நம்பிக்கையோடு தொடர்புடையது என கத்தோலிக்க தேவாலயம் அறிவித்தது.
இன்று, 160 ஆண்டுகளுக்குப் பிறகு டார்வினின் கோட்பாடு பரவலாக அறியப்படுகிறது. பரிணாம வளர்ச்சி என்பது உண்மை என்பதை நாம் அறிவோம்.
கிரகம் மாறிக்கொண்டே இருக்கிறது, நாமும் அவ்வாறே பயணிப்போம்.
டார்வினின் தாத்தா ஓர் இயற்கை விஞ்ஞானி. அப்பா மருத்துவர். தன் மகனை மருத்துவராக்க வேண்டும் என்று டார்வினின் தந்தை எவ்வளவோ முயன்றும் டார்வினுக்கு இயற்கை சார்ந்தே ஆர்வமே இருந்தது. ஒவ்வோர் உயிரையும் நோட்டமிடுவார், வீட்டுக் கட்டிலுக்கு அடியில் எலிகளை வளர்த்தார்.
பூச்சிகள், கடல் சங்கு போன்றவற்றைச் சேகரித்தார். தந்தையின் மருத்துவக் கனவு டார்வினால் கலைக்கப்பட்டது. பிறகு, மகனைப் பாதிரியாராக்க முடிவெடுத்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்த்துவிட்டார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் டார்வினின் ஆர்வத்துக்கு ஏற்ற இடமாக அமைகிறது. தாவரவியல், விலங்கியல், நிலவமைப்பு என்று அனைத்தையும் கற்றார்.
குரங்கும் மனிதனும்
தாவரவியல் பேராசிரியர் ஜான் ஹென்ஸ்லோவின் (John Henslow) நெருங்கிய நண்பரானார்.
எண்ணங்கள் தேங்கி நிற்கும் பொழுது, புதிய தேடலுக்கு மூளையையும், புதிய அனுபவத்துக்கு மனதையும் விசாலப்படுத்துகிறது பயணம். அப்படிப்பட்ட பயணம்தான் டார்வின் வாழ்வின் திருப்புமுனை. இயற்கை அமைப்பு சார்ந்து ஆராய்ச்சி செய்ய `எச்.எம்.எஸ். பீகிள்’ என்ற கப்பலை தென் அமெரிக்க நாடுகளுக்கு அனுப்பியது பிரிட்டன்.
கேப்டன் Robert Fitzroy தனக்கு உதவியாக இயற்கை விஞ்ஞானி வேண்டும் எனக் கேட்க, ஹெஸ்லோவின் பரிந்துரையில் அந்தப் பயணத்தில் இணைந்தார் டார்வின்.
தென் அமெரிக்காவில் பார்த்த தீக்கோழி இனம், கால்பகாஸ் தீவில் பார்த்த ஆமையினம், அர்ஜென்டினாவில் பார்த்த தேவாங்கு போன்ற புதைப்படிவம் ஒவ்வொன்றும் டார்வினுக்கு அச்சர்யங்களைக் கொடுத்தன. கிட்டத்தட்ட அனைத்தும் மற்ற இடங்களில் நாம் பார்க்கும் அதே இனத்தோடு ஒத்துப்போயிருந்தன.


சூழலால் அவை உடலளவிலும் செயலளவிலும் பலவாறு மாறுபட்டிருந்தன. 5 ஆண்டுகளில் 3,200 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து 5,000-க்கும் மேற்பட்ட உயிரின மாதிரிகள், எலும்புகள், புதைப் படிவங்களைச் சேகரித்தார் டார்வின். அதற்கிடையேயான மரபு ஒற்றுமை, உடலியல் வேறுபாடு அனைத்தும் டார்வினுக்கு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வைத்தது.
உயிரினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டவர் ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ். அவரும் தன்னைப்போல் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை வரையறுத்துள்ளார் என்பது டார்வினுக்குத் தெரிய வருகிறது. பரஸ்பரம் இருவரும் சேர்ந்தே தங்கள் ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர்.
1859-ம் ஆண்டு உலகப்புகழ் பெற்ற உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) புத்தகம் வெளியிடப்படுகிறது. ஆன்மிகவாதிகளின் கடும் எதிர்ப்பைச் சந்தித்தார் டார்வின்.
டார்வின் ஒரு சகாப்தம்
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால், இப்போதுள்ள குரங்குகள் ஏன் மனிதனாக மாறவில்லை?",
தற்பொழுது ஏன் பரிணாமங்கள் நிகழ்வதில்லை?” போன்ற கேள்விகள் இன்றுவரை எழுப்பப்படுகிறன. அறிவுத் தளங்களிலேயே குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற கருத்தாக்கம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. டார்வின் அப்படி என்றும் சொல்லவில்லை.
மாறாக, மனிதனும் குரங்கும் ஒத்த, வேறு பொது இனத்திலிருந்து தோன்றியவை என்றே குறிப்பிட்டுள்ளது. மனிதனுக்கும் மனிதக் குரங்குக்கும் மிகத் துல்லியமான மரபு வித்தியாசமே காணப்படுகிறது. `பரிணாமம் என்பது கோடிக்கணக்கான காலச் சுழற்சிக்கு இடையே நிகழ்வது. குறிப்பிட்டு நோக்கும் அளவுக்கு நிகழக் கூடியதல்ல’ என்கிறார் டார்வின்.


அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆன்மிக நம்பிக்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருந்த காலத்தில், டார்வின் கோட்பாடு ஆன்மிகத்தையே கேள்விக்குறியாக்கியது. யூதம்,கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள் கடவுள் படைத்த முதல் மனிதன் ஆதம் என்ற ஒரே ஆதி கோட்பாட்டையே பெற்றுள்ளன. அந்த வகையில், தங்கள் நம்பிக்கைக்கு மாறாக டார்வினியம் உள்ளதாக எதிர்க்கிறார்கள். டார்வின் தன்னை இறை மறுப்பாளராக அறிவித்ததில்லை.
குறிப்பாகப் பைபிளை விரும்பினார். அப்படிப்பட்டவர் ஒரு கோட்பாட்டை வரையறுத்துள்ளார். அது பிற்காலத்தில் ஆன்மிகத்துக்கு ஏற்றதாக மாறலாம் அல்லது ஆன்மிகத்துக்கு ஆதரவான புதிய கோட்பாடுகள் அறிவியல் தளத்தில் உருவாகலாம். ஒவ்வொன்றையும் முறையாக வெளிப்படுத்தும் பொருட்டு அமைகிறது. அறிவியலும் ஆன்மிகமும் முடிவில்லா திசையில் பயணித்துக்கொண்டுதான் உள்ளன.