போலி சாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி… தமிழ் பட நடிகைக்கு ரூ.2 லட்சம் அபராதம்…

SHARE

போலி சாதி சான்றிதழ் அளித்து அமராவதி மக்களவை தனித்தொகுதியில் வெற்றி பெற்ற நடிகை நவ்னீத்துக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழில் அரசாங்கம் மற்றும் அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நவ்னீத் கவுர்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலத்தின் சுயேட்சை எம்.எல்.ஏ., ரவி ராணாவை திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு அமராவதி மக்களவை தனித்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

பின்னர் மீண்டும் அதே தொகுதியில் 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சுயேட்சையாகவே நின்று வெற்றி பெற்று எம்.பி.யானார்.

ஆனால் பட்டியலினத்தவர் என்று போலியாக சாதி சான்றிதழ் காட்டி நவ்னீத் வெற்றி பெற்றதாக சிவசேனா கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த் ராவ் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நவ்னீத்தின் சாதி சான்றிதழை ரத்து செய்ததோடு, அவருக்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதித்தனர்.

மேலும், ஆறு வாரங்களுக்குள் அனைத்து சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை அணுக போவதாக நடிகை நவ்னீத் கூறியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விவசாயம்… ஆட்டோ… மைக்… நாதகவின் அடுத்த சின்னம் குறித்து சீமான் சொன்னது என்ன?

Admin

15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்தது காங்கிரசுக்கு உதவுமா? – முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

கடவுள் ஸ்ரீ ராம் பெயரில் ஏமாற்றுவது அநீதி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Admin

ராஜீவ்காந்தி விருதை மாற்றியது அரசியல் காழ்ப்புணர்ச்சி: காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

பாஜகவின் எந்த பெண்ணாவது பாலியல் புகார் கொடுத்துள்ளாரா? – குஷ்புவின் பேச்சால் சர்ச்சை

Admin

தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் 340% அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்.

கோடநாடு: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு: இன்று முடிவு?

Admin

வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’.. சங்கரய்யாவுக்குகமல்ஹாசன் வாழ்த்து!

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!

Admin

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

நான் தான் அப்பவே சொன்னேனே.. சீனாவை வம்பிழுக்கும் டிரம்ப்!

Admin

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் பேச்சால் அதிர்ச்சி

Admin

Leave a Comment