- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
கோவாக்சின் தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அனுமதியை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பான எஃப்.டி.ஏ. நிராகரித்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்தாக இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கண்டுபிடிப்பை அடிப்படையாக கொண்டு சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளது. இதில் கோவாக்சின் தடுப்பூசியை தேசிய வைராலஜி நிறுவனம், ஐசிஎம்ஆருடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து வருகின்றன. இந்த மருந்தானது 3ஆவது கட்ட பரிசோதனை முடிவுகளை தெரிவிக்காமலேயே பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இதனிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் தொழில் கூட்டு நிறுவனமான ஒகுஜன் நிறுவனம் அமெரிக்காவில் இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் இந்த கோரிக்கையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஏற்க மறுத்துள்ளது. மேலும் கூடுதலாக பரிசோதனைகள் நடத்திய முடிவுகளை தர வேண்டும் என்றும், அதன்பிறகே அனுமதி கேட்டு விண்ணப்பிக்க முடியும்…
மத்திய அரசை பாரதப் பேரரசு என அழைப்போம் என்று நடிகை குஷ்பு ட்வீட் செய்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசை ஒன்றிய அரசு என தமிழக அரசியல் தலைவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கூறி வந்ததால், ஒன்றிய அரசு – என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில், தமிழக பாஜகவின் முக்கிய பிரமுகரும் நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில். தமிழ்நாட்டில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை நிலவுவதாக கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என சிலர் அழைத்தால், நாம் பாரத பேரரசு என அழைப்போம், என பதிவிட்டுள்ளார். குஷ்புவின் இந்த ட்விட்டர் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.- மூவேந்தன்
பாகிஸ்தான் மரணதண்டனை கைதியாக உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவிற்கு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை அந்நாட்டு நாடாளுமன்றம் வழங்கி உள்ளது. குல்பூஷன் ஜாதவ் கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உளவு பார்க்க வந்ததாக பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். குல்பூஷன் ஜாதவ்விற்கு கடந்த 2017ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. 2019ம் ஆண்டு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை அணுகி அவரது தண்டனையை நிறுத்தியது இந்தியா இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள மசோதாவில் குல்பூஷன் ஜாதவ் மேல் முறையீடு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் குல்பூஷன் ஜாதவ் தனது தண்டனையை எதிர்த்து அங்குள்ள உயர்நீதிமன்றங்களில் முறையீடு செய்ய முடியும். இதனால் குல்பூஷன் ஜாதவ் இந்தியா வர வாய்ப்பு இருப்பதாக இந்தியா நம்புகிறது.
கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் போலியானவை என தடுப்பூசி நிர்வாகத்திற்கான குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு வசதியாக மத்திய அரசு ”கோவின்” செயலியை அறிமுகம் செய்தது. இதில் முன்பதிவு செய்து கொள்வதன் மூலமே மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முடியும். இந்த நிலையில் கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் காட்டு தீயாய் பரவியது. இதற்கு விளக்கமளித்துள்ள தடுப்பூசி நிர்வாகத்திற்கான குழுவின் தலைவர், கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானவை என மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் இது குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் விசாரணை நடத்தப்படும் என்றும் கோவின் தரவு கணினிக்கு வெளியே உள்ள எந்தவொரு நிறுவனத்துடனும் பகிரப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் தங்கள் கிராமத்திற்குள் கொரோனா பரவாமல் இருந்ததற்காக அம்மனுக்கு கூழ் ஊற்றும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தங்கள் கிராமத்திற்குள் கொரோனா பரவாமல் காப்பாற்றியதாக ஊர் மக்கள் ஒன்று கூடி அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை கொண்டாடியுள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள நெருப்பாண்ட குப்பம் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுவரை அந்த கிராமத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் 101 குடங்களில் மேளதாளம் முழங்க மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், அங்குள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டது. மேலும் கூழ் ஊற்றி அம்மனுக்கு நன்றி கடன் செலுத்தப்பட்டது. இந்நிலையில் ஊர் அடங்கை மீறி கூடியதாக இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.- மூவேந்தன்
தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட கொரோனா இரண்டாவது தவணை நிவாரணத் தொகை மற்றும் பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக மே மாதம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இந்தத் தொகையை சுமாா் 2.07 கோடி பேர் பெற்றனர். இதனைத் தொடர்ந்து 2 ஆம் கட்ட கொரோனா நிவாரணத் தொகையான ரூ.2000 மற்றும் 14 வகையான இலவச மளிகைப் பொருள்கள் ஜூன் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. இதற்கான டோக்கன் ஜூன் 11 ஆம் தேதி முதல் வரும் 14 ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று வழங்கப்பட உள்ளது. மேலும் இதனை கூட்ட நெரிசல் இல்லாமல் பெற்றுக்கொள்ள வசதியாக காலை 8 முதல் 12.30 மணி வரையிலும்,…
தங்கள் உயிரைக் காப்பாற்றிய மருத்துவரை காப்பாற்ற ஒரு கிராமமே இணைந்து உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கரஞ்சேடு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பாஸ்கர் ராவ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியான மருத்துவர் பாக்யலட்சுமி குண்டூர் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளார். கொரோனா காலகட்டத்தில் தம்பதியினர் இருவரும் கரஞ்சேடு கிராமத்தில் தங்கியிருந்து மக்களுக்கு கொரோனா சிகிச்சையும், நோய் தொற்று குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்துள்ளனர். இதற்கிடையே தம்பதியினர் இருவருக்கும் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் மருத்துவர் பாஸ்கர் ராவ் நிலைமை கவலைக்குள்ளானது. அவர் குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் ஆக்சிஜன் உதவி மூலம் சிகிச்சை பெற்றுவந்தார். மேலும் கடந்த மே 3 ஆம் தேதி பாஸ்கர் ராவின் நிலை மோசமடைந்ததால், விஜயவாடாவில்…
இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6,148 பேர் கொரோனா தொற்றிற்கு பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகின இதற்கான கடந்த சில நாட்களாக இறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில் இன்றும் மட்டும் திடீரென்று உயர காரணம் என்ன? காண்போம் இந்த தொகுப்பில்.இந்தியாவில் இன்று அதிகபட்சமாக கொரோனா தொற்றால் பலியானவர்கள் 6,148 என்ற எண்ணிக்கை வெளியானது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய மாற்றமா என்ற கேள்வி அனைவருக்கு எழலாம் காரணம் இது தான், பீகார் மாநிலத்தில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை மறுதணிக்கை செய்யப்பட்டதே. பீகார் அரசு கொரோனா பாதிப்பு நிலவரங்களை குறைத்துக் காட்டுவதாக புகார் எழுந்த நிலையில், பாட்னா உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாத உயிரிழப்புகளை தணிக்கை செய்ய உத்தரவிட்டது. ஆகவே மறு தணிக்கை செய்ததில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் கொரோனா தொற்றிற்கு 1,600 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. முன்னதாக பீகார் அரசு…
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடும் படி தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழக தொடக்க பள்ளி இயக்குநரகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் சில பள்ளிகள் நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், அங்கீகாரம் இல்லாமல் மாணவர்களின் சேர்க்கையுடன் இயங்கிவரும் தனியார் பள்ளிகளை மூடும் படி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்பட்டு வந்தால், சார்ந்த வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலரே பொறுப்பு என தொடக்கக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பயிலுகின்ற மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கும்படி அங்கீகாரம் இல்லாமல் மாணவர்களின் சேர்க்கையுடன் இயங்கிவரும் தனியார் பள்ளிகளை மூடும் படி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மூவேந்தன்
5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் முகக்கவசம் அணிய அவசியமில்லை என என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. ஆனாலும் வைரசின் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில், மத்திய அரசும் எய்ம்ஸ் மருத்துவமனையும் மறுத்து விளக்கம் கொடுத்தன. இந்த நிலையில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளது. சுகாதாரத்துறையின் புதிய கோவிட் வழிகாட்டு நெறிமுறைகள்: 5 வயது மற்றும் அதற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அவசியமில்லை. 6 முதல் 11 வயதுடைய குழந்தைகள், பெற்றோரின் வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணியலாம். 12 முதல் 18 வயதுடைய குழந்தைகள் சரியான முறையில், பெற்றோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முகக்கவசம்…
