கொரோனா நிவாரணமாக ரூ.2,000 , 14 வகை மளிகைப் பொருட்கள்… இன்று முதல் டோக்கன் விநியோகம்…

SHARE

தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட கொரோனா இரண்டாவது தவணை நிவாரணத் தொகை மற்றும் பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் முதற்கட்டமாக மே மாதம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இந்தத் தொகையை சுமாா் 2.07 கோடி பேர் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து 2 ஆம் கட்ட கொரோனா நிவாரணத் தொகையான ரூ.2000 மற்றும் 14 வகையான இலவச மளிகைப் பொருள்கள் ஜூன் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.

இதற்கான டோக்கன் ஜூன் 11 ஆம் தேதி முதல் வரும் 14 ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று வழங்கப்பட உள்ளது.

மேலும் இதனை கூட்ட நெரிசல் இல்லாமல் பெற்றுக்கொள்ள வசதியாக காலை 8 முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

“PM தோனி, CM விஜய்” – போஸ்டர் மூலம் மதுரையை கலக்கிய விஜய் ரசிகர்கள்

Admin

“தமிழ் மொழி இனிமையான மொழி”.. சட்டப் பேரவையில் ஆளுநர் புகழாரம்

Admin

செயற்கை பண்ணை குட்டை மூலம் விவசாயம் செய்து வரும் சகோதரர்கள்..!!

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

ரவுடிகளுக்கு எதிரான சட்டம்… பேரவையில் நிறைவேறிய சுதர்சனத்தின் கோரிக்கை…

ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது :டாக்டர் கிருஷ்ணசாமி !

Admin

சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.!!!

Admin

கவனம் ஈர்க்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் … என்ன செய்தார் தெரியுமா?

Admin

9 – 11ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு இல்லை: பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டம்

Admin

ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்

Admin

தமிழ்நாடு அரசின் திறமைக்கு சவாலா? சென்னை பல்கலைக்கழக விவகாரம் என்ன?

Pamban Mu Prasanth

குடிக்கமாட்டேன் சொல்லுங்க ஜாமின் கிடைக்கும் : உயர்நீதிமன்றம்

Admin

Leave a Comment