5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் முகக்கவசம் அணிய அவசியமில்லை என என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. ஆனாலும் வைரசின் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில், மத்திய அரசும் எய்ம்ஸ் மருத்துவமனையும் மறுத்து விளக்கம் கொடுத்தன.
இந்த நிலையில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளது.
சுகாதாரத்துறையின் புதிய கோவிட் வழிகாட்டு நெறிமுறைகள்:
5 வயது மற்றும் அதற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அவசியமில்லை. 6 முதல் 11 வயதுடைய குழந்தைகள், பெற்றோரின் வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணியலாம்.
12 முதல் 18 வயதுடைய குழந்தைகள் சரியான முறையில், பெற்றோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முகக்கவசம் அணியலாம்.
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தேவைபட்டால் மட்டுமே மட்டுமே ஸ்கேன்களை எடுக்கவேண்டும்.கொரோனா சிகிச்சைக்கு தற்போது கொடுக்கப்படும் ரெம்டெசிவிர்மருந்து குழந்தைகளுக்குக் கொடுக்க பரிந்துரைக்கப்படவில்லை.
அதே போல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரெம்டெசிவர் பாதுகாப்பானது என கூறும் உறுதியான ஆய்வு முடிவுகள் இல்லை என கூறியுள்ளது.
கோவிட் பாதிப்பு குறைவாக இருக்கும், அறிகுறி இல்லாத குழந்தைகளுக்கு ஸ்டீராய்ட் மருந்துகள் கொடுக்கப்படக் கூடாது. அது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.