மத்திய அரசை பாரதப் பேரரசு என அழைப்போம் என்று நடிகை குஷ்பு ட்வீட் செய்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசை ஒன்றிய அரசு என தமிழக அரசியல் தலைவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கூறி வந்ததால், ஒன்றிய அரசு – என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.
இந்த நிலையில், தமிழக பாஜகவின் முக்கிய பிரமுகரும் நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில்.
தமிழ்நாட்டில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை நிலவுவதாக கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என சிலர் அழைத்தால், நாம் பாரத பேரரசு என அழைப்போம், என பதிவிட்டுள்ளார்.
குஷ்புவின் இந்த ட்விட்டர் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
– மூவேந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்