Author: Admin

சீனாவில் சிறுபான்மையினர்களான உய்குர் இஸ்லாமிய மக்களை அந்நாடு அரசு ஒடுக்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் இஸ்லாமிய மக்களை முகாம்களில் அடைத்துவைத்து சீன அரசு கொடுமைப்படுத்தியது, சீனாவின் இந்த செயலுக்கு பல்வேறு நாடுகளும் ஐநாவும் கண்டனம் தெரிவித்தன. சீன அரசின் இந்த அராஜகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேகா ராஜகோபாலன். இவர் BuzzFeed என்ற பத்திரிகையில் ஊடகவியலாளராக பணியாற்றும் போது சீனாவின் முகாம்களை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார். இதனால் இவருக்கு உலகின் உயரிய விருதான புலிட்சர் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் ஜின்ஜியாங்கில் சீனா ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை முகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த போது மேகா ராஜகோபாலன் அங்கு உள்ள தடுப்பு முகாமுக்கு சென்று சீன அரசின் அட்டூழியங்களை வெளிச்சம் போட்டு காட்டினார். இதனை அவர் வெளியே சொல்லாமல் இருக்க அவரது விசாவை ரத்து செய்தது. நாட்டை விட்டு வெளியேற்றியது சீனா…

Read More

தனது மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் அற்புதம் அம்மாள் தட்டிவிட்டார் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளை கடந்து 31-வது ஆண்டு தொடங்கியுள்ளது. தற்போது,பேரறிவாளனின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவ சிகிச்சைக்காக 30 நாட்கள் அவர் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் இன்று வரை பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்காக கோரிக்கைகளை முன்வைத்து தான் வருகின்றனர். இந்நிலையில்,பேரறிவாளன் விடுதலை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில்: மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?என பதிவிட்டுள்ளார்.

Read More

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 15,108 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,39,705 பேர் ஆக அதிகரித்துள்ளது, சென்னையில் இன்று மட்டும் 989 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 374 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 27,463 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையிலும் 21,48,352 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், முந்தைய சூழலை ஒப்பிடும்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்தே வருகிறது.

Read More

சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு,அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர், செல்போன் எண் அறிவிப்பு கோயிலில் வைக்கப்பட்டுள்ள பலகையில் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். மேலும், கோயிகளில் அர்ச்சகர் பற்றாகுறை ஏதேனும் இருந்தால் அங்கு தேவையான அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும். கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கும் அதற்கான பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்

Read More

கரும்பூஞ்சை நோய்க்கு அளிக்கப்படும் ஆம்போடெரிசின்- பி மருந்துக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த  நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் மருத்துவ பொருட்கள் மீதான ஜி.எஸ்.டியில் இருந்து வரிவிலக்கு அளிக்கபடுவதாக அறிவித்தார்.  நிதியமைச்சரின் புதிய சலுகைகள்: கொரோனா சிகிச்சைக்கு பயனபடும் ரெம்டெசிவிர் மருந்திற்கு ஜிஎஸ்டி 12 -ல் இருந்து 5 சதவிதம் ஆக குறைப்பு. கொரோனா சிகிச்சைக்கான Tocilzumab மருந்துக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு ஆக்சிஜனுக்கான ஜிஎஸ்டி 12 சதவிதத்தில் இருந்து 5% ஆக குறைப்பு சானிடைசர், வெப்பநிலை பரிசோதனை கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர் கொரோனா தடுப்பூசிகளுக்கும்  5% ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கபடுவதாக நிதியமைச்சர் கூறினார். மூவேந்தன்

Read More

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடியில் சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார். கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் தற்போது 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வின் போது கீழடியில், நம் முன்னோர்கள் ஆபரணமாக பயன்படுத்திய கண்ணாடி மணிகள், கல் உழவு கருவி, கத்தி போன்ற ஆயுதம், எடைக் கற்கள், 13 தமிழ் எழுத்துகள் அடங்கிய பானை ஓடுகள், சங்கு வளையல்கள், குழந்தைகள் விளையாடும் செப்புப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை பார்வையிட்ட அமைச்சர்களிடம், பொருட்கள் குறித்து தொல்லியல் துறை இயக்குனர்கள் விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு ,சர்வதேச தரத்தில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனக் கூறினார். மேலும் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிக சமூதாயம் கீழடியில் வாழ்ந்துள்ளதாக கார்பன்…

Read More

கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் அமெரிக்கா காவல்துறையினரால் துன்புறுத்தி கொல்லப்பட்டபோது அதனை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு மே மாதம் 25 ஆம் தேதி அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்தது, உலகளவில் பெரிதாக பேசப்பட்டது.டெரிக் சாவின் என்ற காவல் அதிகாரி, ஜார்ஜ் பிளாய்ட்டை கழுத்தில் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில் அவர் உயிரிழந்தார். இதனை வீடியோவாக பதிவு செய்தவர் டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண் (வயது 17). ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலை வெளி உலகிற்கு தெரிய மிக முக்கிய காரணமாக அந்த வீடியோ தான் இருந்தது. உலகம் முழுவதும் பரவிய வீடியோவால் பலரும் காவல் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்தனர். அமெரிக்காவில் #BlacklivesMatter என போராட்டங்கள் வெடித்தது. போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் வழக்கு தொடர்பாக விசாரணை முடிந்து தண்டனையும் கிடைத்துள்ளது. இந்நிலையில் அந்த வீடியோவை பதிவு…

Read More

ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும் எனவும் அண்ணா பல்கலைக் கழகம் போலவே பாலிடெக்னிக் மாணவர்களும் இரண்டு ஆண்டுகளுக்கான அரியர் தேர்வுகளை தேர்வுக்கட்டணம் செலுத்தி எழுதலாம் எனவும் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கலைக் கழகத்தில் 8 விருப்ப பாடங்கள் இருந்து வரும் நிலையில் வரும் கல்வியாண்டு முதல் 9ஆவது விருப்பப் பாடமாக தமிழும் இடம்பெறும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதியளித்தார்.

Read More

டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பாஜக கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பாஜக கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு நாளும் நோய் தொற்று ஆயிரக்கணக்கில்.. இறப்பு நூற்றுக்கணக்கில்..டாஸ்மாக் திறப்பு அவசியமா ?? ஒரு வருடத்தில் போட்ட வேஷம் மாறியதோ?? ஒலித்த கோஷம் மறந்ததோ??..இதுதான் விடியலா?” என்று பதிவிட்டுள்ளார்.

Read More

இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவிற்கு பொறுப்பு அதிகாரியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார். இவர் அங்கு சென்றதில் இருந்து அப்பகுதி மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக இவர் மேல் எதிர்ப்பு எழுந்து வருகிறது. அவர் செய்த மாட்டிறைச்சி தடை, மதுவிலக்கு நீக்கம், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை கலைத்தது போன்ற செயல்களால் அங்கு உள்ள மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் லட்சத்தீவினை சேர்ந்த நடிகை ஆயிஷா சுல்தானாஒரு தொலைக்காட்சி விவதாத்தில் கலந்துகொண்டார். அதில் லட்சதீவுகுறித்து விவாதம் சென்ற போது பேசிய ஆயிஷா லட்சத்தீவுகளுக்கு மத்திய அரசு பயோ வெப்பனை அனுப்பியுள்ளதாக பேசினார். இது தான் தற்போது சர்ச்சையினை கிளப்பியுள்ளது இதையடுத்து பாஜக தலைவர் அப்துல் காதர் ஹாஜிகாவல் நிலையத்தில் புகாரளிக்க ஆயிஷா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த ஆயிஷா ‘தான் அதிகாரியைதான் பயோ வெப்பன் எனக் கூறினேன். அரசாங்கத்தைப் கூறவில்லை’ எனக் கூறியுள்ளார்.

Read More