- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
தமிழகத்தில் தேநீர் கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது, தமிழக அரசு. அந்த வகையில் தொற்று அதிகம் இல்லாத மாவட்டங்களில் டாஸ்மார்க் கடைகள் இயங்க உத்தரவிட்டது. இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேநீர் கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தேநீர்கடைகள் இயங்க அரசு அனுமதியளித்துள்ளது. தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் ஒருவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் உரையாடிய ஆடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் திக் விஜய் சிங் கூறும்போது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மறு ஆய்வு செய்யப்படும்” என்தெரிவித்துள்ளார். திக்விஜய் சிங்கின் உரையாடலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறும்போது, “பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது” என்று தெரிவித்துள்ளார். திக்விஜய்சிங் கருத்து மூலம், காங்கிரஸ் கட்சி சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக பாஜக உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்து வருவதன் காரணமாக தமிழகத்தில் தளங்களுடன் கூடிய ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான தளர்வுகளில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மதுபானங்களை மொத்தமாக விற்கக் கூடாது எனவும், டாஸ்மாக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபானம் வாங்க வருவோர் 6 அடி இடைவெளிவிட்டு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும்.கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் மற்றும் கால இடைவெளிகளில்…
ஜி7 மாநாட்டில் நேற்று காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’என்ற கோரிக்கையை முன்வைத்தார். பிரிட்டனில் நேற்று ஜி7 மாநாட்டில் காணொலி காட்சி மூலமாக இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய பிரதமர் மோடி,கொரோனா வைரஸ் தொற்றை ஓழிக்க இந்திய அரசும்,பொதுமக்களும் இணைந்து போராடி வருகிறோம் என கூறினார். மேலும்,கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க காப்புரிமை தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் கட்டுப்பாடுகள் இருக்க கூடாது எனவும் கூறினார். தொடர்ந்து,உலகளாவிய சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக அனைத்து நாடுகளும் முன்வரவேண்டும்.அதற்கு ‘ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்’ என்ற கோட்பாடு தேவை என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
போக்கோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த நிறுவனத்தின் எம்3 ஸ்மார்ட்போன் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் விற்பனையில் மட்டும் போக்கோ எம்3 சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. அதேசமயம் விற்பனை தொடங்கிய ஒரே மாதத்தில் சுமார் 5 லட்சம் யூனிட்களை கடந்திருந்தது. இந்நிலையில் மூன்று மாதங்களில் போக்கோ எம்3 சுமார் 7.5 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 663 பிராஸசர், 6 ஜிபி ரேம், 64 ஜிபி ரோம், 6000mah பேட்டரி திறன், 48 எம்பி பிரைமரி கேமரா ஆகிய வசதிகளை கொண்டு ரூ.10,999க்கு விற்பனையாகிறது.
திரையுலகில் இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறைகளிலும் ஒரே நேரத்தில் அசத்தி வரும் ஜி. வி. பிரகாஷ்குமாருக்கு 34வது பிறந்தநாள் இன்று. வெயில் படத்தின் மூலமாக முறைப்படி இசையமைப்பாளராக அறிமுகமானாலும் 6 வயதிலேயே அவருக்கான சினிமா பயணம் தொடங்கியது என்றே சொல்லலாம். ஆம்..ஜென்டில்மேன் திரைப்படத்தில் இடம்பெற்ற “சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே” பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடும்போது அவருக்கு 6 வயது தான். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் சகோதரி மகன் என்பதால் இளம் வயதிலிருந்தே ஜி.வி.க்கு. இசையின் மீது ஒரு காதல் இருந்துள்ளது. அதன் வெளிப்பாடே குறுகிய காலத்தில் ரஜினி,விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, அசுரன், சுரரைப் போற்று, தெறி, மதராசப்பட்டினம் ஆகிய படங்களில் பின்னணி இசையில் தான் ஒரு ஜீனியஸ் தான் என நிரூபித்து இருப்பார்.…
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது. அதனைடிப்படையில் இந்தியாவில் 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு எரிபொருள் விலை உயர்வை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ள நிலையில், ராஜஸ்தானில் டீசல் விலையும் ரூ.100ஐ தாண்டியுள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே பெட்ரோல், டீசலுக்கு அதிக வாட் வரி விதிக்கும் மாநிலங்களில் முதல் இடத்தில் ராஜஸ்தான் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் தமிழகத்திலும் விரைவில் பெட்ரோல் விலை சதமடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்கும் மக்களின் சிம் கார்டுகளின் இணைப்புகள் முடக்கப்படும் என அரசு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றை முறியடிக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் ஒரே தேர்வு என உலக பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானில் மக்களிடையே விழிப்புணர்வு கொடுத்தும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பெருவாரியான மக்கள் முன்வராததால் இந்த முடிவை அந்த பஞ்சாப் மாகாண அரசு எடுத்துள்ளது. மேலும் முதல் டோஸ் செலுத்திக் கொண்ட மக்கள் இரண்டாவது டோஸை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டாதது அம்மாகாண அரசை அதிருப்தியில் ஆழ்த்தியதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
யூரோ கோப்பை கால்பந்து போட்டியின்போது நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்ததால் போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது. யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் தற்போது நடந்து வருகிறது. மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த நாடுகளின் அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இந்த நிலையில் கோபன்ஹேகனில் நேற்று நடந்த ஆட்டத்தின் போது டென்மார்க் மர்றும் பின்லாந்து அணிகள் விளையாடின. முதல் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் சில நிமிடங்கள் கழித்து டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்து மூர்ச்சையானார். இதனால் கால் பந்து போட்டி நிறுத்தப்பட்டு. மருத்துவக் குழுவினர் மைதானத்திற்கு வந்து எரிக்சனுக்கு சிகிச்சை அளித்தனர் , ஆனால் அவருக்கு நினைவு திரும்பவில்லை. இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கிறிஸ்டியன் எரிக்சன் உடல்நலம் சீராக அவரது ரசிகர்களும் சக வீரர்களும் பிரார்த்தனை செய்தனர். தற்போது கிறிஸ்டியன்…
ஒவ்வொரு வருடமும் சிறந்த பிரபலமான படங்களின் பட்டியல்களை ஐஎம்டிபி இணையதளம் வெளியிடும் அதில் இந்த ஆண்டுக்கான சிறந்த படங்களில் முதலில் விஜய் நடித்த மாஸ்டர் படம் முதலிடத்தில் உள்ளது தற்போது 2021ஆம் ஆண்டு, இதுவரை வெளியான இந்தியப் படங்களில் பிரபலமான படங்கள் என்னென்ன என்கிற கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இதில் திரிஷ்யம் 2, கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளி மாஸ்டர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2021 பிரபலமான திரைப்படங்கள்; மாஸ்டர்ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்)தி வைட் டைகர்திரிஷ்யம் 2நவம்பர் ஸ்டோரிகர்ணன்வக்கீல் ஸாப்மஹாராணி (வெப் சீரிஸ்)கிராக்தி கிரேட் இண்டியன் கிச்சன்
