Author: Admin

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டப்பட்ட கொரோனா தேவி கோவில் இடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தாக்க தொடங்கிய போது தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டி, பல்வேறு இடங்களில் கோரோனா தேவி சிலையை நிறுவி பொதுமக்கள் வழிபடத் தொடங்கினர். அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தின் சுக்லபூர் கிராமத்தில் கொரோனா தேவிக்கு கோவில் கட்டப்பட்டது. வேப்ப மரத்தடியில் அமைக்கப்பட்ட இக்கோவில் ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனிடையே 5வது நாளான ஜூன் 11 ஆம் தேதி இரவில் கோவில் இடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொரோனா தேவி கோவிலை நொய்டாவைச் சேர்ந்த லோகேஷ் குமார் என்பவர் பொதுமக்களிடம் நிதி திரட்டி கட்டியுள்ளார். ஆனால் நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டியதாகவும், இதனை நிலத்துக்கு சொந்தக்காரரான எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் இடித்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று காலை முதல் புதிய ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், புதிய ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் 27 மாவட்டங்களில் அதிகாலையிலேயே தேநீர் கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். மேலும் சலூன் கடைகள், டாஸ்மாக் கடைகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம் என்பது உள்ளிட்ட பலவற்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் தமிழகம் மீண்டும் இயல்பு நிலை நோக்கி திரும்பி வருகிறது. ஆனால் தொற்று பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் குறைவான தளர்வுகளே வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.- மூவேந்தன்

Read More

டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் அறிக்கையினை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் : டெல்டா மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டையிலுள்ள வடதெரு என்ற கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிக்கையினை மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 10.6.2021 அன்று வெளியிட்டுள்ளது. இதனை உடனடியாக நிறுத்தவேண்டுமென வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், தொன்றுதொட்டுத் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், தமிழர் நாகரிகத்தின் ஆணிவேராகவும் காவிரிப் படுகை விளங்கி வருகிறது. ”சோழ நாடு சோறுடைத்து” என்ற சொல் நெடுங்காலமாக உள்ளது. இவ்வுளவு பெருமை கொண்ட காவிரிப் படுகை பகுதியையும், அதனைச் சார்ந்திருக்கும் விவசாயப் பெருமக்களின் நலனையும் பாதுகாப்பதில் எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. நேற்றைய தினம், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஜூன் 10 அன்று ஒன்றிய பெட்ரோலியம் மற்றும்…

Read More

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தோனி, தனது மகளுக்கு பரிசளித்த குட்டி குதிரையுடன் ரேஸ் ஓடுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா காரணமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் தங்களது வீடுகளில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சிஎஸ்கே கேப்டன் தோனி விடுமுறையை நாட்களை வீட்டில் செலவழித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் எம்எஸ் தோனி அவ்வப்போது சில வீடியோக்களை பதிவிடுவார். அந்த வகையில் தனது பண்ணை இல்லத்தில் உள்ள செல்லப்பிராணியான ‘ஷெட்லாண்ட் போனி’ என்ற குட்டிக் குதிரையுடன் அவர் ஓடிப்பிடித்து விளையாடுவதை அவரது மனைவி சாக்ஸி வீடியோவாக எடுக்க, அதை தோனி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் குதிரைக்கு இணையாக ஓடும் தல தோனியை இணைய வாசிகள் புகழ்ந்து வருகின்றனர். இந்தக் குதிரையை தோனி தனது மகள் ஜீவாவுக்காக கடந்த சில நாட்களுக்கு…

Read More

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தில் மூத்த நடிகர்கள் சிலர் நடிக்க மறுத்து படத்தில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு இயக்குனர் ௭ச்.வினோத்- தயாரிப்பாளர் போனி கபூர்- நடிகர் அஜித் கூட்டணியில் வெளியாக இருக்கும் திரைப்படம் “வலிமை”. தற்போது கொரோனா தொற்று காரணமாக இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ஆவலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இடையே தற்போது படத்தின் செய்தி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டு வலிமை திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் சீனியர் நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டதாகவும், படப்பிடிப்பிற்காக நடிகர்களை அழைத்து நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பிற்கு வர முடியாது என்று கூறிவிட்டதாகவும் இயக்குனர் எச்.வினோத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கு பதிலாக வேறு சில நடிகர்களை வைத்து படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். அஜித் படத்தில் சீனியர்…

Read More

தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்றும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக் கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர் வீடுகள் முன்பு நின்று இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதன்படி கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், தமிழக அரசே டாஸ்மாக்கை திறக்காதே’ எனும் வாசகங்களுடன் கூடிய பதாகையை ஏந்தி தனது வீட்டின் முன்பு போராட்டம் செய்தார்.- மூவேந்தன்

Read More

சேலம் மேட்டூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொரோனா நிவாரண நிதிக்காக தனது இரண்டு பவுன் செயினை அளித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சேலத்தில் நேற்று மேட்டூர் அணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது பொதுமக்களிடமிருந்து மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார். இதில் சௌமியா என்ற இளம்பெண்,கொரோனா நிவாரண நிதிக்காக தனது 2 பவுன் செயினையும்,வேலைவாய்ப்பு கேட்டு ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் “இரா. சௌமியா ஆகிய நான் BE. கம்ப்யூட்டர் சைன்ஸ் பட்டதாரி, எனது தந்தை ஆவின் ஓய்வு பெற்ற பணியாளர்.என்னுடன் பிறந்த மூத்த சகோதரிகள் இரண்டு பேர் இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. எனது தந்தை பணியில் இருந்து பெற்ற சம்பளத்தொகை அனைத்தையும் எங்களை படிக்க வைக்கவும் சகோதரிகளுக்கு திருமணம் செய்யவும் செலவு செய்து விட்டார். நாங்கள் மூன்று பெண்களும் பட்டதாரிகள் ஆனால், வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. எனது தந்தை பணி ஓய்வு பெற்று வந்த சில…

Read More

பாதுகாப்பு பணிக்காக பெண் காவலர்களை சாலை ஓரங்களில் நீண்ட நேரம் நிற்க வைக்க வேண்டாம் என டிஜிபி திரிபாதி அறிவுறுத்தி உள்ளார். கொரோனா தொற்று காலத்தில் பெண் காவலர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் காவலர்களுக்கு அதிக பணிச்சுமை மற்றும் நேரடியாக களத்திற்கு சென்று பணியாற்ற கூடிய பணிகளை ஒதுக்க வேண்டாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து முதலமைச்சர் பாதுகாப்பு பணிகள் உட்பட பல பணிகளில் பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கவும், சாலைகளில் நீண்ட நேரம் பெண் காவலர்களை நிற்க வைக்க வேண்டாம் எனவும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.- மூவேந்தன்

Read More

இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிகை 42 லட்சம் என அமெரிக்க செய்தித்தாள் செய்தி வெளியிட்டது சர்ச்சையாகியுள்ளது இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை யில்இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 42 லட்சமாக இருப்பதாக செய்தியில் கூறி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் எந்த ஆதாரமும் இல்லாமல் இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.- மூவேந்தன்

Read More

கோயில்களை மூடி வைத்துவிட்டு மதுக்கடைகள் திறப்பதா? என ஹெச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, அந்த வகையில் கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் காலை 10 மணியிலிருந்து மாலை 5 வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளன. டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக, போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ’கோயில்கள் மூடிக்கிடக்கிறது, டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதா? உடனடியாக டாஸ்மாக் திறக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்’ என்று கூறினார்.- மூவேந்தன்

Read More