வலிமை திரைப்படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்!!!

SHARE

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தில் மூத்த நடிகர்கள் சிலர் நடிக்க மறுத்து படத்தில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு இயக்குனர் ௭ச்.வினோத்- தயாரிப்பாளர் போனி கபூர்- நடிகர் அஜித் கூட்டணியில் வெளியாக இருக்கும் திரைப்படம் “வலிமை”. தற்போது கொரோனா தொற்று காரணமாக இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ஆவலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இடையே தற்போது படத்தின் செய்தி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டு வலிமை திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் சீனியர் நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டதாகவும், படப்பிடிப்பிற்காக நடிகர்களை அழைத்து நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பிற்கு வர முடியாது என்று கூறிவிட்டதாகவும் இயக்குனர் எச்.வினோத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதனால் அவர்களுக்கு பதிலாக வேறு சில நடிகர்களை வைத்து படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். அஜித் படத்தில் சீனியர் நடிகர்கள் நடிக்க மறுத்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு… வேறு அமர்வுக்கு மாற்றம்

Admin

ஆட்டத்துக்கு வந்த அண்ணாத்த… மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு.

Admin

இயல் இசை நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்!

Admin

வெப் சீரிஸில் ஆடையில்லாமல் நடிக்கும் சமந்தா..!

Admin

ரிலீஸ் பண்ண பத்தே நிமிடத்தில்.. ஆன்லைனில் வெளியான நெற்றிக்கண் : அதிர்ச்சியில் படக்குழு

Admin

விஜய் இந்த ஜாதி தான்… கோபத்தில் பள்ளியை மிரட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர்…

Admin

கிருத்திகா உதயநிதியுடன் இணையும் காளிதாஸ்… நெக்ஸ்ட் மூவி அப்டேட் இதோ

Admin

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த படங்கள் எவை? – பட்டியல் இதோ…

திரைப்படமாகிறது ஜீவஜோதியின் வாழ்க்கை

Admin

ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு – இந்த தீபாவளி ட்ரிபிள் ட்ரீட்

Admin

முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்தார் ரஜினிகாந்த்

Leave a Comment