- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
கடவுள் ஸ்ரீ ராம் பெயரில் ஏமாற்றுவது அநீதி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிலம் வாங்கியதில் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வசூலித்து வரும் நிலையில் அறக்கட்டளை பெயரில் நிலம் வாங்கியுள்ளது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த மோசடி புகார்களை ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அறக்கட்டளையின் சார்பாக வெளியிட்ட அறிக்கையில், ராமர் கோவிலுக்கான நிலம் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டது.ஏற்கனவே நிலத்தின் உரிமையாளர்கள் விற்ற…
நாளைமுதல் அருங்காட்சியங்கள் மற்றும் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது கொரோனா பரவல் வேகம் குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை முதல் அருங்காட்சியங்கள் மற்றும் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளது.
தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. .தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் 27 மாவட்டங்களில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மதுபிரியர்கள் கூட்டம் காலை முதலே டாஸ்மாக்கை நோக்கி படையெடுத்தது. அந்த வகையில் திறக்கப்பட்ட முதல் நாளில் ரூ.164.87 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.49.54 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. சென்னை மண்டலத்தில் 42.96 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 38.72 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.
தமிழகத்தில் 2வது கட்ட கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை இன்று முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளன. கொரோனா காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு ரூ.4 ஆயிரம் நிவாரணத் தொகை அறிவித்தது. இதில் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் கடந்த மே மாதம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் 2ஆவது கட்ட நிவாரணத்தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் ஏற்கனவே தேதி குறிப்பிட்டு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாதம் இறுதிவரை இதனை பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் நிவாரணமாக அளிக்கப்படும் மளிகைப் பொருட்களை வெளிச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…
கிஷோர் கே சாமி கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து யூடியூபர் மாரிதாஸ் ட்விட்டரில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் தலைவர்கள் அண்ணா, கருணாநிதி, மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சுவாமி இன்று காலை கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து யூடியூபர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை! ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் திமுக ஸ்டாலின் அவர்கள் இறங்கியுள்ளார். சட்டத்தை தன் பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியை கலைப்பது தான் சரி” என பதிவிட்டார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், ‘ தைரியம் இருந்தா கை வைச்சு பாரு… நீங்க எல்லாம் யாரு நீங்க சொல்லிட்டா மக்களால்…
அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தக்கூட்டத்தில் சசிகலாவுடன் ஆடியோவில் யாராவது பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கபட்டதாக ஓ.பி.எஸ். – இ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர். அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவை விமர்சித்து புகழேந்தி நேற்று பேட்டியளித்த நிலையில், இன்று கட்சியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. மேலும்,சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட 15பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
சிம்பு நடித்துவரும் மாநாடு படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடிகர்கள் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகரன் உட்பட பல நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு மாநாடு திரைப்படத்தை இயக்கி வருகிறார். வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார். படத்தின் பட்ஜெட் 65 கோடி எனவும் இத்திரைப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ள நிலையில், ஜூன் 21-ஆம் தேதி படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது. இந்நிலையில் ரிலீசுக்கு தயாராகி உள்ள மாநாடு படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வண்ணம் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஜூலை 21-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அன்று படத்தின் டிரெய்லரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் அலுவலக கட்டிடம் காட்டுவதற்காக நடப்பட்ட அடிக்கல் கல்லை சில மணி விவசாயிகள் பிடிங்கி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுபாஜக இயற்றிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆறு மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர் என்பதும் நாம் அறிந்ததே. இந்த போராட்டத்திற்கு இன்னும் முடிவுக்கு வராது நிலையில் கிடைக்காமல் உள்ளதுஇந்த நிலையில் இன்று ஹரியானா மாநிலத்தில் புதிதாக அலுவலகம் கட்டுவதற்காக பாஜகவினர் நட்டகல்லை வைத்துள்ளனர் பாஜகவினர். அதனை விவசாயிகள் போராட்டம் நடத்தும் விவசாயிகள்பிடுங்கி எறிந்துள்ளனர்.இதனால் அந்த பகுதியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முக்கிய அரசு அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர் அந்த வகையில் இன்று ஒரே நாளில் 39ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் இறையன்பு வெளியிட்டுள்ளார். அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: செங்கல்பட்டு ஆட்சியராக இருந்த ஜான் லூயிஸ் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மாநில மனித உரிமை ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் ஆட்சியர் சாந்தா நில நிர்வாக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் ஆட்சியராக இருந்த மேகராஜ் நகராட்சி நிர்வாக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு 39 ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தனது பெயரில் போலியான டுவிட்டர் கணக்கை தொடங்கி கருத்துக்களை பதிவிட்டு வரும் நபர் மீது நடவடிக்கை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் தனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கியுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கோரி புகார் மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் செந்தில் : தனக்கு ட்விட்டர், முகநூல் கணக்கு பற்றியெல்லாம் எதுவும் தெரியாது எனவும், தான் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை எனவும் தெரிவித்தார். தனது நண்பர்கள் மூலம் தனது பெயரில் விஷக் கிருமிகள் யாரோ போலியான கணக்கை ட்விட்டரில் தொடங்கியுள்ளதை அறிந்ததாக அவர் தெரிவித்தார். அந்த டாஸ்மாக் திறப்புக்கு தான் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் டாஸ்மாக்குகளை மூடக் கோரிக்கு வைத்ததுபோல் அந்த ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். போலி கணக்கு தொடர்பாக சென்னை காவல்…
