தைரியம் இருந்தா கை வைச்சு பாரு: மாரிதாஸை வெச்சு செய்த செந்தில்குமார் எம்.பி.,

SHARE

கிஷோர் கே சாமி கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து யூடியூபர் மாரிதாஸ் ட்விட்டரில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் தலைவர்கள் அண்ணா, கருணாநிதி, மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சுவாமி இன்று காலை கைது செய்யப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து யூடியூபர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை! ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் திமுக ஸ்டாலின் அவர்கள் இறங்கியுள்ளார். சட்டத்தை தன் பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியை கலைப்பது தான் சரி” என பதிவிட்டார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், ‘ தைரியம் இருந்தா கை வைச்சு பாரு… நீங்க எல்லாம் யாரு நீங்க சொல்லிட்டா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைத்துவிடுவர்களா செம காமெடி. நிறைய வேலை இருக்கு. அவங்க வரும் வரை நேரத்தை பயன் உள்ளதாக செலவழிக்கவும். பி கு: உள்ளே போகும் போது மறக்காம போர்டை எடுத்துட்டு போகவும் என கூறியுள்ளார்.

இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

Pamban Mu Prasanth

கோடநாடு: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு: இன்று முடிவு?

Admin

இனி அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Admin

கேரளாவின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன்

“அன்பின் வழியது உயிர்நிலை” முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கவர்ந்த வள்ளுவர் ஓவியம்!.

Admin

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

தலிபான்கள் ஆதிக்கம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையும்: காா்த்திக் சிதம்பரம் எம்.பி.

Admin

தேர்தல் பத்திரங்கள் : திமுக பொய்களும் பாஜக பொய்களும்

Admin

திமுகவிற்கு மன உறுதி இல்லை போல.. பா.ஜ .க துணைத்தலைவர் கே.அண்ணாமலை!

Admin

புகைப்படத்துக்கா பஞ்சம்? திமுக – அதிமுக விளம்பரங்களில் காணப்பட்ட ஒரே புகைப்படத்தால் சர்ச்சை…

உள்ளாட்சி தேர்தல் எப்போது ? முதல்வர் ஆலோசனை

Admin

என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

Admin

Leave a Comment