- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை நீடிக்க கோரி முதலமைச்சரை நேரில் சந்தித்து அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தாகவும், தற்போது பேரறிவாளனுக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெறுவதால் பரோலை நீடிக்க கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார். மேலும், பரோலை நீடிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், பேரறிவாளனை விடுவிக்கும் எண்ணத்தில் தான் அரசு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியதாகவும் அற்புதம்மாள் கூறினார்.
தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என ஏ.கே. ராஜன் குழு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த குழுவில் மருத்துவத்துறைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட 8 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இதனிடையே நீட் தேர்வில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் மக்களின் கருத்தையும் இக்குழு கேட்க முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் 23 ஆம் தேதிக்குள் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து தமிழக மக்கள் neetimpact2021@gmail.com என்ற இணைய முகவரியில் கருத்து கூறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார் .தமிழக முதல்வரான பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக சந்திக்கும் நிலையில், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது, செங்கல்பட்டு தடுப்பூசி மையம், நீட் தேர்வு மற்றும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை குறித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க உள்ளார்.
பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் மீரா மிதுன்.போட்டியிலிருந்து வெளியே வந்த பின்பும் நடிகர்கள் மீது சரமாரியாக புகார்களை முன் வைத்து அதற்கு சரியான பதிலடியும் வாங்கிகொண்டார். அதுமட்டுமில்லை ஆடை இல்லாத போட்டோக்களை வெளியிட்டும் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதனால், மீரா மிதுனுக்கு எதிராக நெட்டிசன்கள் போடும் மீம்ஸ்களுக்கு குறையே இல்லை… சிறிது நாளாக தலைமறைவாக இருந்த மீரா மிதுன், மறுபடியும் ஒரு பிரச்சனையோட வந்துள்ளார். தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக முதல்வர் மு.க ஸ்டாலினை டேக் செய்து மீரா மிதுன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கை ஒன்றையும் அந்த பதிவில் இணைத்துள்ளார். அந்த அறிக்கையில், “அஜித் ரவியின் அமைப்பில் நான் வேலை செய்தேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விலகிவிட்டேன். அந்த அமைப்பில் இருந்த போது அழகி பட்டம் வென்ற நான் அவர் செய்த அநீதியால் விலகி விட்டேன். எனக்கு எதிராக அவர்…
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிரபல சமையல் நிகழ்ச்சியின் நடிகை தமன்னா களமிறங்க உள்ளார். தமிழ்,தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா தற்போது ‘சீட்டிமார்’, ‘ மேஸ்ட்ரோ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே புகழ்பெற்ற ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செப் தமிழில் விஜய் சேதுபதி, கன்னடத்தில் கிச்சா சுதீப் தொகுத்து வழங்க ஒளிபரப்பாக உள்ளது. இதனை நடிகை தமன்னா தெலுங்கு மொழியில் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை ஆண் நடிகர்களே தொகுத்து வந்த நிலையில் தற்போது ஒரே பெண் நடிகையாக தமன்னா களம் இறங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் எனவும், இதற்காக அவர் அதிகமான ஊதியத்தை பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியை மூட மாவட்ட குழந்தைகள் நல குழுமம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு, அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்தது. தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தில் சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்க சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டதால் சிபிசிஐடி அதிகாரிகள் டேராடூன் சென்றனர். ஆனால் போலீசார் அங்கு வருவதை தெரிந்து கொண்ட சிவசங்கர் பாபா அங்கிருந்து டெல்லிக்கு தப்பிச் சென்றார். இருப்பினும் தனிப்படை போலீசார் அவரை டெல்லியில் வைத்து இன்று கைது…
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் வைப்பு நிதியாக 5 லட்ச ரூபாய் செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கொரோனா பாதிப்பால் பல குழந்தைகள், தங்களது தாய் தந்தையை இழந்து தவித்து வருகின்றன. குடும்பத்தின் ஆதாரமாக இருந்து உறவுகளை இழந்து அனாதைகளாக்கப்படும் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்கிற கோரிக்கை பலராலும் வைக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து குழந்தைகளின் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் வைப்பு நிதியாக 5 லட்ச ரூபாய் செலுத்தும்…
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் இன்று அதிகாலை சென்னை அசோக் நகர் அருகே லாரி மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை குறித்து கேலியாக பதிவுசெய்துள்ளார். அதில் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் பரவி வந்த வீண் வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். ஊருல இருக்கறவனையெல்லாம் கண்டெண்ட் ஆக்குன என்னையே கண்டெண்ட் ஆக்கீட்டீங்களேடா. என தனக்கு தானே கிண்டல் செய்துள்ளார்.
ஏடிஎம் மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க ஏடிஎம் காவலாளி , ஏடிஎம் இயந்திரத்தின் மீது வேப்பிலையை வைத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த ஏடிஎம் காவலாளி ஒருவர் தான் பணிபுரியும் ஏடிஎம் மையத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தின் மீது வேப்பிலையை வைத்துள்ளார். வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தினமும் ஏடிஎம் இயந்திரத்தின் மீது இந்த வேப்பிலையை வைத்து இருப்பதாகவும் வேப்பிலை வைப்பதால் கொரோனா தொற்று பரவாது என்றும் அவர் கூறுகிறார். தற்போது இந்த வேப்பிலை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காஜியாபாத்தில், முதியவர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், டுவிட்டர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில், பாகிஸ்தானின் உளவாளி என கூறி முதியவர் ஒருவரை கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியது. அப்போது அவரது தாடியை மழித்து, வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீராம் உள்ளிட்ட முழக்கங்களை முழங்கவும் அந்த கும்பல் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் காட்டுத் தீயாய் பரவி, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், புதிய டிஜிட்டல் விதிகளுக்கு இணங்காமல், இத்தகைய தகவல்களை பதிவிட்டதோடு, அவற்றை அகற்றாமல் இருந்த டிவிட்டர் மீதும், கலவரத்தை தூண்டும் வகையிலான செய்திகளை வெளியிட்டதற்காக சில பத்திரிகையாளர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கையை உத்தரபிரதேச போலீசார் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
