முதல்வரையே டேக் செய்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மீரா மிதுன் ட்வீட்

SHARE

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் மீரா மிதுன்.
போட்டியிலிருந்து வெளியே வந்த பின்பும் நடிகர்கள் மீது சரமாரியாக புகார்களை முன் வைத்து அதற்கு சரியான பதிலடியும் வாங்கிகொண்டார்.

அதுமட்டுமில்லை ஆடை இல்லாத போட்டோக்களை வெளியிட்டும் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதனால், மீரா மிதுனுக்கு எதிராக நெட்டிசன்கள் போடும் மீம்ஸ்களுக்கு குறையே இல்லை…

சிறிது நாளாக தலைமறைவாக இருந்த மீரா மிதுன், மறுபடியும் ஒரு பிரச்சனையோட வந்துள்ளார்.

தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக முதல்வர் மு.க ஸ்டாலினை டேக் செய்து மீரா மிதுன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கை ஒன்றையும் அந்த பதிவில் இணைத்துள்ளார்.

அந்த அறிக்கையில், “அஜித் ரவியின் அமைப்பில் நான் வேலை செய்தேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விலகிவிட்டேன். அந்த அமைப்பில் இருந்த போது அழகி பட்டம் வென்ற நான் அவர் செய்த அநீதியால் விலகி விட்டேன். எனக்கு எதிராக அவர் போலி வழக்குகள் தொடர்ந்தார். அதிகாரத்தையும் பணத்தையும் வைத்து பிரச்சினைகள் கொடுத்தார்.

என் பிராஜக்ட்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்படுத்தி மூன்று ஆண்டுகளாக டார்ச்சர் செய்கிறார். இதில் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை. அஜித் ரவியால் நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன். சுஷாந்த் சிங் ராஜ்புத் போன்று நான் இறந்த பிறகு அஜித் ரவி தண்டிக்கப்பட வேண்டும். இது தற்கொலை அல்ல கொலை” என குறிப்பிட்டுள்ளார். மீரா மிதுன் வெளியிட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு – இந்த தீபாவளி ட்ரிபிள் ட்ரீட்

Admin

குடும்பம் தான் முக்கியம்… பிக்பாஸ் இல்லை : ஜி.பி.முத்து அதிரடி

Admin

அட பாவி நான் உயிரோட இருக்கேன்யா: அதிர்ந்துபோன சித்தார்த் காரணம் என்ன?

Admin

பிரம்மாண்ட காவியம் பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

Admin

“நாங்க வேற மாதிரி” – வலிமை பாட்டை கொண்டாடும் ரசிகர்கள்

Admin

மாஸ் காட்டிய அண்ணாத்த… விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..

Admin

ஜெய்பீம் காலண்டர் காட்சி சர்ச்சை – நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.. தனி விமானத்தில் பயணிக்க மத்திய அரசு அனுமதி

Admin

’ஜெய்பீம்’ படத்தில் வரும் ராஜாக்கண்ணு கொலை வழக்கு – உண்மையில் நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

நடிகர் விவேக் மரணம்… விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்

Admin

டெடியாக நடித்தது இவர்தான்: புகைப்படம் வெளிட்ட ஆர்யா

Admin

Leave a Comment