- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
ஒரு நல்ல நாகரிகமான சமுதாயத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில், கருத்து தெரிவித்துள்ள மதுரைக்கிளை நீதி மன்றம், தூத்துக்குடியில் எந்தஆயுதமும் இல்லாமல் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது – என்று கூறியதுடன், மேலும் ,ஒரு நாகரிகமான சமுதாயத்தில் சம்பவம் நடைபெறுவது ஏற்புடையதா? எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை மற்றும் தமிழக முதன்மைச் செயலாளர் அறிக்கை இரண்டையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும். வழக்கு குறித்த மனு மீதான கேள்விக்கு தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுக்கு வழக்கை மாற்றம் செய்தும் நீதிபதிகள்…
மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் இரண்டே முக்கால் லட்சம் பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தையொட்டி பதிவாகி வருகிறது. டெல்டா பிளஸ் வைரஸ் முதன் முதலில் மகாராஷ்டிராவில் தான் கண்டறியப்பட்டது. அங்கு மட்டும் டெல்டா பிளஸ் வைரசின் 21 நபர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று மூன்றாவது அலை தொடங்கி விட்டதோ என்ற அச்சத்தை உருவாக்கி உள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,844 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 197 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வரும் ஜூலை மாதம் முதல் ஊரடங்கு தளர்வுகளை தற்காலிகமாக நிறுத்த அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முடிவெடுத்துள்ளார். கொரோனாவின் 3வது அலையிலிருந்து மக்களை காக்க அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
கொரோனா நோய் பயத்தில் பலர் இறக்கும் நிலையில் கொரோனா வைரஸ், பூஞ்சை நோய்கள் தொடர்பான தகவல்களை மிகைப்படுத்தலாமா? என தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் ஆவேசமாக பேசினார். தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்ததால் ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், யாதத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள வசலமர்ரி கிராமத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் தத்தெடுத்துள்ளார். இங்கு நடந்த வளர்ச்சி பணிகள் தொடக்க விழாவில் பேசிய அவர்: கருப்பு பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை, பச்சை பூஞ்சை என விதவிதமான நிறங்களில் பூஞ்சை நோய் வருவதாக கூறுகின்றனர். உண்மையில் அது உள்ளதா? இல்லையா? என்பது கூட முழுமையாக தெரியவில்லை. இதுபோன்ற தகவல்கள் வேகமாக பரவ விடுகிறார்கள். இதனால், நோய் பயத்திலேயே பலர் இறந்து விடுவதாக கூறினார். ஆகவே உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகள் உள்ள இந்த சமயத்தில் பூஞ்சை நோயினை வைத்து மிகைப்படுத்தி அவர்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதியில் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மதுரையில் தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தின் அருகே ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என காஞ்சிரக்கோடு எம்.எல்.ஏ பிரின்ஸ் ரயில்வேத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலளித்த தெற்கு ரயில்வே, மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள இடமானது திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரு ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது என்றும், இதற்கு இடைப்பட்ட தூரமானது 10 கிலோ மீட்டர் மட்டுமே என்ற நிலையில் கூடுதல் ரயில் நிலையம் வழங்குவதற்கான தேவையில்லை. இருப்பினும் ரயில்கள் நின்று செல்ல பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் மலையாள நடிகை அனுபமா தேர்ச்சி பெற்றதாக மார்க் ஷீட் ஒன்று வைரலாகி வருகிறது. பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக உருது, சமஸ்கிருதம் மற்றும் அறிவியல் ஆகிய 3 பாடங்களின் மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அது வெளியிடப்பட்ட நிலையில், ரிஷிகேஷ் குமார் என்ற மாணவரின் மதிப்பெண் பட்டியலில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த மார்க் ஷீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடுகள் நடத்துள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்ட தொடங்கியுள்ளனர். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு பொறியியல் துறையின் தகுதிப்பட்டியலில் இந்தி நடிகை சன்னி லியோனின் புகைப்படம் தவறுதலாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இந்திய ஆடும் அணியில் ஜடேஜாவை சேர்த்தது தவறு என்று முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதற்கு முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் கடும் விமர்சனத்தை தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரும் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இந்தியா 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி முதலிலேயே தவறு செய்துவிட்டது. மேலும் டாஸ் போடுவதற்கு ஒருநாள் தாமதமாகியும் அணியை மாற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ரவீந்திர ஜடேஜாவை இவர்கள் இடக்கை சுழற்பந்துவீச்சுக்காக அணியில் எடுக்கவில்லை. அவரை பேட்டிங்கிற்காக எடுத்தார்கள் அதுதான் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனாதற்போது 85 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் உருமாறிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உருமாறிய வைரஸ்கள் பற்றி உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி: இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் ஆல்பா, 170 நாடுகளிலும் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் பீட்டா, 119 நாடுகளிலும், பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் காமா, 71 நாடுகளிலும் பரவி உள்ளது. இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா தற்போது உலகம் முழுவதும் 85 நாடுகளில் பரவியுள்ளது. அவற்றில் 11 நாடுகள் கடந்த 2 வாரங்களுக்குள் டெல்டா கொரோனாவைக் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சென்னை மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சென்னையில் துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மாதவரம் காவல் நிலையம் காவல் உதவி ஆய்வாளர் சதீசை மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் தொல்லைக்கு உதவியதாக சிறுமியின் தாய் , பெரியம்மாவும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எஸ்.ஐ.சதீஷ்க்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தந்தை புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் எஸ்.ஐ.சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாதவரம் பால்பண்ணை அருகே வசிக்கும் ரேவதி என்பவருடன் எஸ்ஐ சதீஷ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது . இந்த பழக்கத்தின் காரணமாக காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் ரேவதியின் மகளுக்கு…
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை அவசர ஆலோசனை நடத்தப்படவுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என…
ஸ்விகி செயலி மூலம் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். தமிழில் ஒருநாள் கூத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பொதுவாக என் மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிர் புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ், ஒரு அதிர்ச்சி தகவலை தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியுள்ளார். அதன்படி அவர், ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி செயலி மூலம் Moonlight takeaway உணவகத்தில் ஃபிரைட் ரைஸ் ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், அந்த ஹோட்டல் மீது புகைப்படத்துடன் ஸ்விகி இந்தியாவை டேக் செய்து புகார் அளித்துள்ளார். மேலும் Moonlight takeaway உணவகத்தை ஸ்விகி செயலியிலிருந்து நீக்கவும் நடிகை கோரிக்கை விடுத்துள்ளார்.…
