Author: Admin

வங்கதேசத்தில் உலகிலேயே குள்ளமாக கருதப்படும் பசுவை காண மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வங்கதேச தலைநகர் டாக்கா அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில் ராணி என்ற பசு 51 செ.மீ. உயரம், 66 செ.மீ. நீளம், 26 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இதுதான் உலகிலேயே குள்ளமான பசுவாக கருதப்படுகிறது. இதன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ கொரோனா விதிமுறைகளையும் மீறி இந்தப் பசுவை பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். பலர் பசுவுடன் செல்ஃபி எடுத்து வருகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த மாணிக்யம் என்ற பசுவை உலகின் குள்ளமான பசு என கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்தது. இதன் உயரம் 61 செ.மீ. ஆகும். இந்நிலையில் 51 செ.மீ. உயரமுள்ள ராணி பசுவுக்கு உலகின் குள்ளமான பசு என்ற அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் 72வது பிறந்தநாள் விழா நேற்று ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புலிவேந்துலாவில் உள்ள ஒய்.எஸ்.ஆர் சமாதியில் ஜெகன் மோகன் ரெட்டி குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அங்கிருந்து ஹைதராபாத்துக்கு வந்த ஜெகனின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி என புதிய கட்சியை தொடங்கினார். மேலும் இளம் பச்சை மற்றும் நீல வர்ணத்தில் உள்ள கட்சி கொடியும் இந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் நடுவே தெலங்கானா மாநில வரைபடமும், மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் படமும் இடம் பெற்றுள்ளது. தெலங்கானா மாநிலம் உருவானதில் முதல்வர் சந்திரசேகர ராவின் குடும்பம் மட்டுமே இதனால் லாபமடைந்துள்ளதாகவும், ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலம் ஆந்திராவின் பொற்காலம் என்றும் நிகழ்ச்சியின் பேசிய ஒய்.எஸ். ஷர்மிளா தெரிவித்தார்.

Read More

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள சினிமா நட்சத்திரங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக நடிகர் சூர்யா தனது கருத்தை பதிவு செய்திருந்ததை எதிர்த்து தமிழக பாஜக இளைஞர் அணி நடிகர் சூர்யாவிற்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் பாஜகவை எதிர்த்தும் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குரல் கொடுத்துள்ளார்.  இதுகுறித்து சீமான் தனது ட்விட்டர் பதிவில், ‘எங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும். தம்பி சூர்யா தனியொரு நபரென நினைத்துக் கொண்டு, மத்தியில் இருக்கும் அதிகாரப்பின்புலத்தைக் கொண்டு அவரை அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் அது மோசமான எதிர்விளைவுகளைத் தருமென எச்சரிக்கிறேன்.’ என அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும்,கருத்துச்சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிற இச்சட்டத்திருத்தத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தைஉளப்பூர்வமாக வரவேற்கிறேன். சூர்யாவின் இந்நிலைப்பாட்டுக்கு நாம்…

Read More

ஜீவஜோதியின் வாழ்க்கை வரலாறுஆகிய 5 மொழிகளில் சினிமா படமாக தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்த சரவண பவன் ராஜகோபால் , ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் சிக்கியதும் பிரபலமாக பேசப்பட்டது. இந்த நிலையில் சம்பவங்களை வைத்து இந்தப் படம் தயாராக உள்ளது. இதில் ஜீவஜோதியாக நடிக்கும் நடிகை, ராஜகோபாலாக நடிக்கும் நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. படம் குறித்து ஜீவஜோதி கூறும்போது, “எனது வாழ்வில் நான் அடைந்த துன்பங்களைத் தாண்டி, உணர்வுப்பூர்வமிக்க சட்டத்தின் வழியிலான எனது போராட்டத்தை, , ஜங்கிலி பிக்சர்ஸ் திரைப்படமாக உருவாக்க முன்வந்திருப்பது மனதிற்கு நெகிழ்வைத் தருகிறது. எனது கதையில் ஆணாதிக்கத்தின் முகத்தை, நான் அனுபவித்த வலியை அனைவரும் உணர்வார்கள் என உறுதியாக நம்புகிறேன் என கூறியுள்ளார்.

Read More

மீனவர்கள் தன்னை தூக்கிச் சென்றது ஏன் என்பது பற்றி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார் தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பழவேற்காடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் படகில் இருந்து கீழே இறங்கிய போது அவரை மீனவர் ஒருவர் தூக்கிக் கொண்டு வந்து கால் தண்ணீரில் படாமல் கரையில் இறக்கினார் அவரது செருப்பு தண்ணீரில் படக்கூடாது என்பதற்காக அமைச்சரை மீனவர் ஒருவர் தூக்கிக் கொண்டு செல்லுமாறு கூறியதாக வீடியோ வைரலானது. இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த அனிதா ராதாகிருஷ்ணன் நான் யாரையும் தூக்கி கொண்டு செல்ல சொல்லவில்லை அவர்கள் அன்பு மிகுதியால் (மீனவர்கள்) என்னை தூக்கிக் கொண்டு சென்றார்கள் . இத்தனை ஆண்டுகளில் பழவேற்காடு பகுதியில் ஆய்வு செய்ய வந்த அமைச்சர் நீங்கள் ஒருவர்தான் என எ மீனவர்கள் பாராட்டியதாக கூறினார்.

Read More

தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து புதிய தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று விவாக்கம் செய்யப்பட்டு, 43 புதிய மத்திய அமைச்சரகள் பதவியேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை உள்ளிட்ட பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து, அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகிய இருவரில் ஒருவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டநிலையில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை நியமனம் செய்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார்.

Read More

மக்கள் நீதிமய்யம் கட்சி முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக இருந்தவர் மகேந்திரன். கமல் கட்சி துவங்கியதிலிருந்து அவருடன் நெருக்கமாகவும், முக்கியப் பொறுப்பிலும் இருந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சிங்காநல்லுார் தொகுதியில் போட்டியிட்டு, 36 ஆயிரத்து 855 ஓட்டுகள் பெற்றார். ஆனால், தேர்தல் முடிவுகள் வந்த பின், கமலுக்கும், மகேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து , மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மகேந்திரன் விலகினார். இந்த நிலையில் மகேந்திரன் தி.மு.க.,வில் இணைவதாக தகவல் வெளியான நிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். மகேந்திரன் திமுகவில் இணைந்தது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது . கொங்கு மண்டலத்தில் தி.மு.க., எதிர்பார்த்த வெற்றியை பெறாதது வருத்தமளிக்கிறது. லேட்டானாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் கிடைத்துள்ளார்.…

Read More

கங்கை நதியில் கொரோனா வைரஸ் இருப்பதற்கான தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கங்கை நதியில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மிதந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதுமட்டுமின்றி நதியில் நீர் மட்டம் உயர்ந்ததை அடுத்து கரையோரங்களில் புதைக்கப்பட்டிருந்த சடலங்கள் நீரில் மிதக்க தொடங்கின. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டினர்.இந்த சம்பவம் பெரும் பேசும் பொருளாக மாறியது. இதனையடுத்து கங்கை நீதி கொரோனா வைரஸ் பரவி இருக்கிறதா என ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி தேசிய கங்கை தூய்மை திட்ட இயக்கம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து பல்வேறு பகுதிகளில் இருந்து கங்கை நதியின் மாதிரியை சேகரித்து ஆய்வு நடத்தியது. இதில் கங்கை நதியில் கொரோனா வைரஸ் இருப்பதற்கான தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் முன்னாள் மனைவி மெலின்டா, உலகின் மிகப்பெரியஅறக்கட்டளையான கேட்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலர் பொறுப்பில் இருந்து, 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்வார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பில் கேட்ஸும், அவரது மனைவி மெலின்டா கேட்ஸும் அண்மையில் விவகாரத்து செய்தனர். அவர்கள் இருவரும் இணைந்து நிர்வகித்து வந்த கேட்ஸ் அறக்கட்டளையில் பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே இவர்களின் விவகாரத்து முடிவால், கேட்ஸ் அறக்கட்டளை செயல்பாடுகளை நிர்வகிப்பதில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும், தொடர்ந்து பொறுப்பில் நீட்டிப்போம் என்றும் இருவரும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அறக்கட்டளையை நிர்வகிக்கும் பொறுப்பில் நீட்டிக்க முடியாது என முடிவு எடுத்துள்ளனர். இதையடுத்து, தற்போது அறக்கட்டளையின் இணை தலைவராகவும் அறங்காவலராகவும் உள்ள மெலின்டா, தனது பொறுப்புகளில் இருந்து விலகுவார் என கேட்ஸ் அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்னர், கேட்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகப் பொறுப்பை, பில் கேட்ஸ் முழுமையாக ஏற்கக்கூடும் எனவும் தகவல்…

Read More

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டப்படுவதற்கான முயற்சியை தடுக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பிறகும், மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக முதலமைச்சர் அறிவித்தது அதிர்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் கர்நாடகா எடுக்ககூடாது என்றும், கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உரிய அறிவுரையை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், குடிநீர் வழங்கல் என்ற போர்வையில் மேகதாதுவில் அணைகட்டப்படும் என்ற கர்நாடக முதலமைச்சரின் அறிவிப்பு தமிழக மக்களையும், விவசாய மக்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அணை கட்டப்பட்டால் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறையும் என்றும், தமிழகம்…

Read More