- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்து காணப்பட்டதாக மதுரை மாவட்ட பாஜக செயலாளர் மகா சுசீந்திரன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசுக்கு எதிராக செயல்பட்டால் முன்னாள் முதல்வர், துணை முதல்வர் சிறை செல்ல நேரிடும் என்றும், அதனால் அவர்கள் எதிர்க்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் திமுகவை எதிர்த்து அதிமுகவால் அரசியல் செய்ய முடியாது. அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்து காணப்பட்டது என்று மகா சுசீந்திரன் தெரிவித்துள்ளார். இது அதிமுக – பாஜக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கூடுதல் தளர்வுகள் இன்று அமலுக்கு வந்தது. தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அரசு ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டித்து கூடுதல் தளர்வுகளை அளித்து சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் இருந்துபுதுச்சேரிக்கான பேருந்து சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள், உணவகங்கள், தேநீர் கடைகள்,50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்படலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சர்வதேச விமான போக்குவரத்து, தியேட்டர்கள், மதுபான பார்கள், நீச்சல் குளங்கள், சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் வலிமை. கடந்த 2019 ஆம் ஆண்டே தொடங்கிய படபட்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டது.பின்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது படப்பிடிப்பு நடைப்பெற்றது. இந்த படத்தில் பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடிக்க .யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.கிட்டத்திட்ட கடந்த 2 ஆண்டுகளாக படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகததால் அஜித் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் ‘வலிமை அப்டேட்’கேட்டு ட்விட்டரிலும் பார்க்கும் இடமெங்கும் ட்ரெண்ட் ஆனது வலிமை அப்டேட். இந்த நிலையில் அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு தற்போது முடிவு வந்துள்ளது.ஆம் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. மாஸாக உள்ளது மோஷன் போஸ்டர் 2 ஆண்டுகளுக்கு பிறகு வலிமை மோஷன் வெளியானதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர் இனிமே தல டக்கருதான்.
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவருக்கென்று தமிழகத்தில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது. வலிமை அப்டேட் வரத விரக்தியில் அஜித் ரசிகர்கள் உலகமெங்கும் கேட்டு வந்த நிலையில் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு தற்போது முடிவு வந்துள்ளது. ஆம் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அஜித் ரசிகர்கள் செம குஷியாக உள்ளனர்.
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களை கொண்ட கொங்கு நாடு உருவாக்கப்பட உள்ளதாக நேற்றைய தினசரியில் செய்தி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலான நிலையில், தமிழகத்தை பிரிக்க முடியாது என திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கூறியிருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம். எந்தத் தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாத போது சுயலாபத்திற்காக தமிழர்களை சாதிரீதியாக கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது.என்று கூறியுள்ளார். மேலும் ‘ஏற்கனவே, மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்றுவரை தொடரும் நிலையில், சாதியை முன்வைத்து தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும். எனவே, வெள்ளைக்காரர்களைப் போல பிரித்தாளும்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் திமுகவில் இணைத்தார். திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாச்சலம், ஈரோடு மாவட்டத்தை திமுகவின் எஃகு கோட்டையாக மாற்றுவேன் என சூளுரைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நிதிக்காக இணையவில்லை, உதயநிதிக்காக திமுகவில் இணைந்துள்ளேன் என்று தோப்பு வெங்கடாச்சலம் கூறினார்.
ரஷியாவில் இருந்து வரும் சைபர் தாக்குதல்களை தடுக்க முறையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த சில மாதமாக சைபர் தாக்குதல் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அரசின் முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் அமெரிக்காவின் உள்துறை, பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற 9 அரசு துறைகள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷியா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ரஷியா திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான ‘கசேயா’ மீது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ‘ரான்சம்வேர்’ தாக்குதல் நடத்தப்பட்டது. இது ஏற்கனவே…
மத்திய அரசின் சமூக வலைத்தளங்களுக்கானபுதிய விதிகளைப் பின்பற்றும் வகையில் வினய் பிரகாஷ் என்பவரை உள்நாட்டு குறைதீா்க்கும் அதிகாரியாக ட்விட்டர் இன்று நியமித்ததுள்ளது மத்திய அரசு புதிய ஐடி விதிகளின்படி சமூக வலைத்தளங்கள் தங்களது பயனாளா்களின் புகாா்கள் தொடா்பாக நடவடிக்கை எடுக்க உள்நாட்டு குறைதீா்க்கும் அதிகாரியினி நியமிக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-இல் வெளியிட்டது. இந்த விதிகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எதிராக தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, அந்த அவகாசம் மே 25-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் குறைதீர்க்கும் அதிகாரியை ட்விட்டர் நியமிக்காமல் இருந்ததால், மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த நிலையில், உள்நாட்டு குறைதீா் அதிகாரியாக வினய் பிரகாஷை ட்விட்டர் நியமித்துள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது இல்லத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அந்த சந்திப்பின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் தேமுதிக தரப்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், பொருளாளர் பிரேமலதா துணை செயலாளர் எல்.கே சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர். மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகு முதன் முறையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்துள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் விஜயகாந்த், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார்.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் குழந்தைகளிடம்பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து மாணவிகள் 3 பேர் நேரடியாக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், டெல்லி காசியாபாத்தில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து செங்கல்பபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை தேறியவுடன் சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் சிபிசிஐடி காவலில்…
