- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
தமிழ்நாட்டில் இனி ஊடகவிவாதங்களில் பங்கேற்க கூடாது என்ற முடிவை அதிமுக எடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கழக தலைவர்களின் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தலைப்புகளை வைத்து ஊடகங்களில் விவாதங்களை நடத்துகிறார்கள். எங்களுக்கு இது மன வருத்தத்தை கொடுக்கிறது. எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அதனால் அதிமுக இனி ஊடக விவாதங்களில் ஈடுபடாது என கூறியுள்ளனர். மேலும், அதிமுகவின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டும் யாரையும் ஊடக விவாதங்களில் அடையாளப்படுத்த வேண்டாம் . அதிமுகவின் பெயரை எந்த வகையிலும் பிரதி பலிக்கும் வகையில் யாரையும் விவாதத்திற்கு அழைக்க வேண்டாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை 4 ஆம் தேதி முதல் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளதாக ஹைதராபாத் விஞ்ஞானி விபின் ஸ்ரீவாஸ்தவா அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா உலகையே ஆட்டி படைத்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை விரைவில் உருவாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை கடந்த ஜூலை 4 ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கலாம் என ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் விபின் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். அவரின் கருத்து படி: இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரம் கொரோனா இரண்டாம் அலை தொடங்கியது போல, ஜூலை 4-ஆம் தேதியே நாட்டில் மூன்றாம் அலை தொடங்கி இருக்கலாம் என கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் கொரோனா 2 ம் அலை…
தனக்கு அமெரிக்க குடியுரிமை இருந்தாலும் தன் மனதின்இந்தியா என்பதுஆழமாக பதிந்துள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை . ‘நான் குடியுரிமை அளவில் அமெரிக்கனாய் இருந்தாலும் என்னுள் இந்தியா ஆழமாக உள்ளதாக தெரிவித்துள்ளார் மேலும் ‘சமூக வலைதளங்களின் சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இவற்றின் மீது தாக்குதல்கள் நடத்துகின்றன. அதே சமயம்கூகுள் ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டு சட்டத்திற்கு உட்பட்டு முறையாக செயல்படுவதாக’ கூறியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சி கடந்த ஜூலை 1 ஆம் தேதி தனது நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பெய்ஜிங்கில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜாக்கிஜான்: நான் பல நாடுகளுக்கு சென்ற போது சீனா அனைத்து வகையிலும் குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. சீன குடிமகனாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன். ஐந்து நட்சத்திரங்கள் உடைய சீன சிவப்பு கொடிக்கு உலகம் முழுவதும் மரியாதை கிடைக்கிறது. ஹாங்காங்கும், சீனாவும் என் பிறப்பிடம். ஹாங்காங்கில் விரைவில் அமைதி திரும்பும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், சீன கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை மிக குறைந்த காலத்திலேயே நிறைவேற்றி வருவதாகக் கூறிய ஜாக்கி சான்,…
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக அரசின் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அடம்பிடித்து வருகிறார். இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி இன்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்த ஒரு கட்டுமான பணியை மேற்கொள்ள கூடாது. அதை மீறி தற்போது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்துக்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இத்தகைய…
யூரோ கால்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடிய போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் வெம்ப்லே மைதானத்தில் நேற்று நடைபெற்ற யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இத்தாலி வெற்றி பெற்றது.24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ சிறப்பாக விளையாடினார். ஏற்கனவே 5 கோல்களை அடித்து இருந்திருந்த அவர், இறுதி போட்டியில் இத்தாலி- இங்கிலாந்து அணி வீரர்கள் அதனை முறியடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் நடப்பு போட்டியில் ரொனால்டோ அடித்த 5 கோல்களை கடக்கவில்லை. இதையடுத்து தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையுடன் ‘தங்க காலணி’ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் சர்வதேச போட்டியில் இதுவரை 109 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார் சென்னை சைதாப்பேட்டையில் நரிக்குறவர் சமுதாயத்துக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு அதிலும் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் நரிக்குறவர் சமுதாயத்துக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு இந்த முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, மா.சுப்ரமணியன், கேரளாவில் இதுவரை 18 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழக கேரள எல்லையோர கிராமங்களில் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல்…
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கொரோனா பரவல் காரணமாகவும் அரசியலுக்கு வரமாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடித்துவிட்ட வந்த ரஜினி இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அறிவிப்பதாக க கூறினார். தற்போது, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அரசியலுக்கு வரும் நோக்கத்தில் ரஜினி ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. காலச்சூழ்நிலைகள் அதற்கு இடம் கொடுக்காததால் அரசியலில் ஈடுபடமுடியவில்லை. எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபடு எண்ணம் எதுவும் இல்லை. ஆகவே மக்கள் மன்றம், இனி ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தனது முடிவினை உறுதியாக தெரிவித்துவிட்டார் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் இன்றுஆலோசனை நடத்த உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவதாக கூறிய நிலையில் 2021ம் ஆண்டு தொடக்கத்தில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் என அறிவித்தார். அதன்பின்னர் கொரோனா பரவல் தீவிரம் அடைந்த சூழலில், உடல்நல குறைவு ஏற்பட்டது, அதனால் அரசியலில் ஈடுபட முடியாது என ரஜினி அறிவித்து, தன்னோடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் தங்களது மக்கள் மன்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இணைந்தனர். இதில் முக்கியமாக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் தலைமையில் 6 முக்கிய நபர்கள் திமுகவில் இணைந்தனர். அண்மையில் அண்ணாத்தே படப்பிடிப்பை முடித்து விட்டு தனது உடல்நிலை மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில் வேறு கட்சிகளுக்கு சென்ற நிர்வாகிகளுக்கு மாற்றாக பணியமர்த்தப்பட்ட நிர்வாகிகளையும்,…
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் இத்தாலி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 16வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் இத்தாலி- இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனிடையே சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நள்ளிரவில் நடைபெற்றது. ஆட்டத்தில் முதல் பாதியில் இங்கிலாந்து அணியும், இரண்டாம் பாதியில் இத்தாலி அணியும் தலா ஒரு கோலுடன் சமநிலை வகிக்க ஆட்டம் டிராவில் முடிந்தது. பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் இத்தாலி அணி 3 கோல்களும், இங்கிலாந்து அணி 2 கோல்களும் அடித்தன. இதனடிப்படையில் இத்தாலி அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 4 முறை…
