Author: Admin

பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் குறித்த சர்ச்சை வீடியோ ஒன்று யூ-டியூபில் வெளியான நிலையில், பாஜக கட்சிப் பொறுப்பிலிருந்து கே.டி.ராகவன் ராஜினாமா செய்தார். இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: சமூக ஊடகத்தில் வெளியான கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்த செய்திகளை அறிந்தேன். இந்த வீடியோவை வெளியிட்ட யூ-டியூபர் மதன் ரவிச்சந்திரன் என்னை சந்தித்துப் பேசியது உண்மை. முதல் முறையாக என்னை கட்சி அலுவலகத்தில் அவர் சந்தித்துப் பேசியபோது, கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் பற்றிய வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், உடனடியாக அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றங்களால் மட்டும் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு விடக்கூடாது. அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தேன்.…

Read More

2015 ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு அடிப்படை அறிவு கூட இல்லாத ஆட்சியாளர்களே காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2015ம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழையின் போது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் விவாதம் ஏற்பட்டது. உண்மையை மூடி மறைக்க எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். உண்மையை எவராலும் மறுக்க முடியாது. நடந்தவற்றை கூறினால்தான் உண்மை வெளிவரும். முன்னறிவிப்பு ஏதுமின்றி நவம்பர் 17ம் தேதி மற்றும் டிசம்பர் 2ம் தேதி இரவு நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அப்பாவி மக்கள் அடித்துச் செல்லப்பட்டார்கள். இதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு என குற்றம் சாட்டப்பட்டது. திடீரென அதிக அளவில் தண்ணீரை திறந்தால் மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஆட்சியாளர்கள் செயல்பட்டதாக கூறியுள்ள அழகிரி. நூற்றுக்கணக்கான உயிரிழப்பு…

Read More

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ்,அண்ணன் நேற்று போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், என் தம்பி விபத்தில் இறக்கவில்லை, திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர்’ என கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான் கடந்த வாரம் ஊட்டியில் போலீசார் முன் ஆஜராகி மீண்டும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய தீபு, சதீசன், சந்தோஷ்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் விஜயன், முனிரத்தினம் ஆகியோர் மனு ஒன்று தாக்கல் செய்தனர். athil, ‘முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, முன்னாள் கலெக்டர் சங்கர், எஸ்பி முரளி ரம்பா, அதிமுக வர்த்தகர் அணி மாநில தலைவர்…

Read More

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது 11வது திருமணநாள் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமான பிரகாஷ்ராஜ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வம் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுள்ளார். இவர் நடிகை லலிதா குமாரியை 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் பரஸ்பர சம்மதத்துடன் 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதனையடுத்து 2010 ஆம் ஆண்டு போனி வர்மாவை பிரகாஷ்ராஜ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் நேற்று தனது 11 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். அப்போது தனது மகன் வேதந்த் எங்கள் திருமணத்தை பார்க்க விரும்பியதால் அவன் முன்னிலையில் நாங்கள் இருவரும் மீண்டும் திருமணம் செய்துக் கொண்டோம் என ட்விட்டரில் பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார். மகனின் ஆசையை நிறைவேற்றிய பிரகாஷ்ராஜுக்கு…

Read More

100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மற்றும் தனியார் தொலைக்காட்சி மீதான குற்றச்சாட்டுகளை வரையறை செய்வதற்கான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். , ஜீ தொலைகாட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜீ தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தியதால் ரூ 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ஆம் அண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஜீ தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் மற்றும் தனியார் தொலைதொலைக்காட்சி ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் ஜீ தொலைக்காட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில்,…

Read More

தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் மீது காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன் இடம் பெற்றதாக பாலியல் சர்ச்சைக்குள்ளான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை யூ-ட்யூபர் மதன் வெளிச்சத்துக்கு கொண்டு வர பல்வேறு தரப்பில் இருந்தும் கே.டி. ராகவனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றது. இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி. ராகவன் அறிவித்தார். மேலும் “தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்” என ட்விட்டரில் பதிவு ஒன்றையும் வெளியிட்டார். அதில் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக பா.ஜ.க.வின் கே.டி. ராகவன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read More

பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பாஜக பிரமுகரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி. ராகவன் இடம் பெற்றதாக பாலியல் சர்ச்சைக்குள்ளான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை யூட்யூபர் மதன் வெளிச்சத்துக்கு கொண்டு வர பல்வேறு தரப்பில் இருந்தும் கே.டி. ராகவனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றது. இதனைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கே.டி. ராகவன் அறிவித்தார். இதனிடையே நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் இந்த வீடியோ குறித்து பெயர் குறிப்பிடாமல் இரு ட்வீட்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்றில் இன்று காலை எழுந்தவுடன் என் கண்களை என்னால் நம்ப முடியாத அளவுக்கு ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மற்றொரு ட்வீட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன்னிருந்து தப்பினாலும்…

Read More

கிங்காங் திரைப்படத்தின் கதையையே உண்மையாக்கும் சம்பவம் ஒன்று பெல்ஜியம் நாட்டில் நடந்துள்ளது.பெல்ஜியம் நாட்டில் அண்ட்வெர்ப் மிருகக் காட்சி சாலை – என்ற மிருகக்காட்சி சாலை உள்ளது. அதில் 38 வயதான ’சிடா’ என்ற ஆண் சிம்பன்சி குரங்கும் உள்ளது. இதன் செல்லப் பெயர் ‘கிங் காங்க்’.அந்த மிருகக்காட்சி சாலைக்கு ‘அடி டிம்மர்மன்ஸ்’ என்ற பெண் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார். அங்கு அவர் வருவதற்குப் பிரதான காரணமே அந்த சிம்பன்சி குரங்குதான்.இது குறித்து சமீபத்தில் ஊடகங்களில் பேசிய டிம்மர்மன்ஸ் ‘எங்களுக்கு நடுவில் ஆழ்ந்த அன்பும் காதலும் உள்ளது’ – என்றார். இதனையடுத்து அந்த மிருகக்காட்சிசாலை நிர்வாகம் டிம்மர்மேன்ஸ் உள்ளே நுழைய தடை விதித்து உள்ளது. அந்த தடைக்கு எதிராக டிம்மர்மேன்ஸ் போராட அந்த செய்தி இப்போது சர்வதேச ஊடகங்களை ஈர்த்து உள்ளது.”இந்த தெய்வீகக் காதலை ஏன் பிரிக்கின்றீர்கள்?” – என்று மிருகக்காட்சி சாலையில் ஊடகங்கள் கேட்க அவர்களோ, ‘டிம்மர்மன்ஸ் இனி…

Read More

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இந்திய விமானத்துக்காக காத்திருக்கும் ஓர் இளம் தாயின் அவலநிலையை டெல்லியில் உள்ள அவரது தாயார் தனியார் தொலைக்காட்சியிடம் பகிர்ந்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த அந்தப் பெண் தனது மகள் காபூலில் எதிர்கொண்டுள்ள சிக்கலான சூழலை கண்ணீர் மல்க விவரித்துள்ளார். அவர் கூறியதாவது: எனது மகள் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் அங்கிருந்து முதலில் எனது மகளும், பேரனும் மட்டும் வெளியேறுமாறு மருமகன் கூறினார். அதனால் அவரும் காபூல் விமானநிலையத்துக்கு வந்தார். இரண்டு நாட்களாக அவர் அருகிலிருந்த திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்போது, இந்திய விமானம் வந்துள்ளதாக கூறப்பட்டதால் அனைவரும் ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டனர். ஆனால் விமான நிலையம் வரும் வழியில் தலிபான்கள் அவர்களைத் தடுத்தி நிறுத்திவிட்டனர். முதலில் சென்ற வாகனத்தில் இருந்த 80 பேர் விமானநிலையம் அடைந்தனர். அடுத்ததாக வந்த வாகனத்தில் இருந்த எனது…

Read More

ஐபிஎல் 14-ம் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லர் விலகியுள்ளார்.ஐபிஎல் 14-ம் சீசனின் முதல் பாதி இந்தியாவில் நடைபெற்றது. அப்போது கொரோனா பாதிப்பு அதிகரித்தன் காரணமாக பாதியிலேயே தடைபட்டது. இந்த நிலையில் ஐ.பி.எல் தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிரபல ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் தம்பதி இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி இருப்பதால் இரண்டாம் பகுதி ஐபிஎல் போட்டிகளிலிருந்து அவர் விலகியுள்ளார். அவருக்குப் பதில் மாற்று வீரராக நியூசிலாந்து விக்கெட் கீப்பர் கிளென் பிலிப்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. முக்கிய ஆல்-ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற இடைவெளி எடுத்துக்கொள்வதாக அறிவித்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார். இந்த வரிசையில் தற்போது ராஜஸ்தான் அணியின் மற்றுமொரு முக்கிய வீரர் பட்லரும் விலகியிருப்பது ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மிகப்…

Read More