ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: தோனி வழக்கு தள்ளிவைப்பு

SHARE

100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மற்றும் தனியார் தொலைக்காட்சி மீதான குற்றச்சாட்டுகளை வரையறை செய்வதற்கான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.


ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

, ஜீ தொலைகாட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜீ தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தியதால் ரூ 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ஆம் அண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் ஜீ தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் மற்றும் தனியார் தொலைதொலைக்காட்சி ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கில் ஜீ தொலைக்காட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மேட்ச் பிக்ஸிங் செய்தது, சூதாட்டத்தில் தோனிக்கு தொடர்பிருப்பதாக இடைத்தரகர் கிட்டியின் சாட்சியம் அளித்தது.

மேலும் தோனியை காப்பாற்றும் நோக்கில் கிட்டியின் வாக்குமூலத்தை சிபிசிஐடி மறைத்தற்கு முத்கல் கமிட்டி கண்டித்தது ஆகியவற்றை மறைத்து தோனி வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் தோனி என்பவர் கிரிக்கெட்டை விட உயர்ந்தவர் இல்லை என்றும், அது சூதாட்டத்தின் அடித்தளமாக மாறிவருவதாகவும், அதுபோலதான் சமீபத்தில் உச்சநீதிமன்றமும் கருத்து தெரிவித்துள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவித்திருந்தது.

தோனி மீது தங்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை என்றும், கிரிக்கெட்டின் நடைபெறும் சூதாட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவரவே விவாத நிகழ்ச்சியை நடத்தியதாகவும், ஆனால் ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கவே தோனி வழக்கு தொடர்ந்துள்ளாதால் அபராதத்துடன் அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, தனிமனித உரிமையை பாதிக்காமல் கருத்து சுதந்திரம் என்ற உரிமை இருக்க வேண்டும் என தெரிவித்து கிரிகெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் வரையறுப்பதற்காக வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒலிம்பிக் போட்டியினை மிரட்டும் கொரோனா.. அச்சத்தில் டோக்கியோ

Admin

இங்கிலாந்தை ஓட ஓட விட்ட இந்திய அணி – ஓவல் டெஸ்டில் அபார வெற்றி

Admin

ஒரே ஒரு ரன்னில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு… பட்டியலில் மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Admin

ரத்த தானம் செய்த கிரிக்கெட் ஜாம்பவான்… வைரல் வீடியோ

Admin

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

யூரோ கோப்பை கால்பந்து : இத்தாலி அணி சாம்பியன்

Admin

டுவிட்டரில் உதவி கேட்ட வீராங்கனை: ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

தமிழ் வீரமே வாகையே சூடும் : ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழக வீரர்களுக்கு கமல் ஹாசன் வாழ்த்து!

Admin

ஜடேஜாவை அணியில் சேர்த்தது மிகப்பெரிய தவறு – சஞ்சய் மஞ்சரேக்கர் விளாசல்

Admin

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

ஐபிஎல் தொடருக்காக 5வது டெஸ்ட் போட்டி ரத்து ? – சர்ச்சையில் சிக்கிய இந்திய அணி

Admin

Leave a Comment