- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு ஜியோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு மடல் எழுதியுள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உதாரணமாக இணைய வாசி குமரி கிழவானார் தனது முக நூல் பதிவில்: குமரிப்பகுதியில் உள்ள ஐயாவழி பதியை அபகரிக்க ரொம்ப நாளா திட்டம் போடும் ஒன்றியம் இதே திட்டத்தோடுதான் களம் இறங்கியது. இதை குமரி இயற்கை ஆர்வலர்கள் மிக கடுமையாக எதிர்த்தனர் அவர்களை தேசதுரோகிகள் என பாசக நோட்டீசு அடித்து ஒட்டியது இந்த இடத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 75 கிமீ அனந்தபுரத்திற்கு 65 கிமீ 150 கிமீட்டருக்குள் மூன்று விமானநிலையம் யாருடைய தேவைக்கு….? மக்கள் வரிப்பணத்தை வீணாக்கவா…..? தங்க நாற்கர சாலை பணி முற்றுபெற்றால் ஒரு மணிநேரத்தில் அனந்தபுரமும் ஒரு மணிநேரத்தில் தூத்துக்குடி விமானநிலையமும் இதை விட வேகமாக பறக்க…
டோக்கியோ பாராலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 24 ஆம் தேதி முதல் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பாக தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர். இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினாபென் பட்டேலுக்குவெள்ளி பதக்கம் வென்றார். நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல், சீன வீராங்கனை ஜாங்க் மியா மோதினார். இந்த போட்டியில் பவினா படேல் 32 என்ற புள்ளிக் கணக்கில் ஜாங்க் மியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில், இன்று இறுதி போட்டியில் சீனாவின் ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார் பவினா. இதனால் டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில்…
இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் வலைதளத்தில் பேனரில் விடுதலை போராட்ட தலைவர்களின் படங்களில் நேருவின் படம் இடம்பெறாததை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எச்.ஆர்.சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தனது வலைதளத்தில், மகாத்மா காந்தி, சுபாஸ் சந்திரபோஸ், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தலைவர்களின் புகைப்படங்களில் முன்னாள் பிரதமர் ஜவகர்ஹால் நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியினர் மோடி அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய சுதந்திரத்தின் முன்னோடி குரலான ஜவஹர்லால் நெருவை தவிர்த்து விடுதலையை கொண்டாடுவது அற்பமானது . வரலாற்றுக்கு முற்றிலும் தவறானது. ஐ.சி.எச்.ஆர். தன்னை இழிவுப்படுத்தும் மற்றொரு சந்தர்ப்பம். இது ஒரு பழக்கமாகி வருகிறது என கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இரு தரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் மூன்று கிராமங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி நல்லவாடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கேயே மீன்பிடித்துக் கொண்டிருந்த வீராம்பட்டினம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த விவகாரம் ஊரில் இருப்பவர்களுக்கும் தெரியவரவே, இரு தரப்பும் ஆயுதங்களை வைத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது சம்பவ இடத்தில் இருந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் நோக்கில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் 2 முறை சுட்டனர். அதன்பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மீனவ கிராமங்களுக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டது.
கீழடி அகழாய்வில் முதன் முறையாக அதிகபட்சமாக 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடியில் 8 குழிகள் வரை தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை உறைகிணறுகள், மூடியுடன் கூடிய பானை, சுடுமண் பகடை, தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, சிவப்பு பானை, பானை ஓடுகள் உள்ளிட்டவை கீழடியில் கண்டறியப்பட்டுள்ளது. கீறல்களை கொண்ட பானை ஓடுகள் மட்டும் இதுவரை 1,300க்கும் மேற்பட்டவைகள் கீழடியில் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது ஏழாம் கட்ட அகழாய்வில் அதிகபட்சமாக 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கிடைத்த பானை ஓடுகளில் அதிகபட்ச எழுத்துகளை கொண்ட பானை ஓடு இதுதான் என கூறப்படுகிறது.இதற்கு முன்பு அதிகபட்சமாக 7 எழுத்துகள் அடங்கிய பானை ஓடுதான் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் ஆதன், உதிரன் – போன்ற பெயர்கள்…
ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில், நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையினர் தாக்கியதில் விவசாயிகள் காயமடைந்துள்ளனர். இந்தப் படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன. கலவரம் நடக்கும் காட்சிகள் மேலும், போராடும் விவசாயிகளை தாக்குவதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் காவல்துறைக்கு உத்தரவு வழங்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம், மைசூர் சாமுண்டி கோவில் அருகே கடந்த 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு, தனியார் கல்லூரி மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த சிலர், இளைஞரை தாக்கிவிட்டு, கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செல்போன் டவர் மூலம் கர்நாடக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 5 பேர் கொண்ட கும்பல் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மனைவியை கடித்த பக்கத்து வீட்டு நாய்… கடுப்பான கணவன்… துப்பாக்கியால் சுட்டுக்கொலைமேலும், அவர்கள் ஐவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து சேயூர் காவல் சரக எல்லை பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்த பெங்களூரு போலீசார், அவர்களை மைசூருக்கு அழைத்துச்…
மதன் – கே.டி.ராகவன் – அண்ணாமலை என பாஜகவுக்குள் நடக்கும் வீடியோ விவகாரம் குறித்தது அல்ல இந்தக் கட்டுரை. அதை STING OPERATION என்று சொல்லும் குளறுபடிதான் இங்கு பேசுபொருள். தமிழக பாஜகவுக்குள் நடக்கும் உட்கட்சி விவகாரங்கள் மெல்ல மெல்ல பொதுவெளியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. எப்படி யாருடைய அந்தரங்க விவகாரங்களுக்குள்ளும் நாம் தலையிடக் கூடாதோ, அதுபோலத்தான் எந்த ஒரு உட்கட்சி விவகாரத்துக்குள்ளும் நாம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அது சமூகவெளிக்கு வந்து இடையூறை ஏற்படுத்தும் வரையில். எந்த ஒரு பிரபலத்தையோ, பிரமுகரையோ எளிதாக அவமானப்படுத்தும் கருவிகளாக பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்பது நாம் மறுக்க முடியாத ஒன்று. இந்த உத்தி நேரு-எட்வினா முதல் நேற்று வெளிவந்த கே.டி.ராகவன் விவகாரம் வரை உயிர்ப்போடு இருக்கிறது. ஆனால், இதை வெளிக்கொண்டு வந்ததாக சொல்லும் மதன் இதனை ஸ்டிங் ஆப்பரேஷன் என்கிறார். ஆனால், இது ஸ்டிங் ஆப்பரேஷன் இல்லை என்பதோடு மக்களுக்கு கூடுதலாக…
தமிழக சட்டப்பேரவையில் புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூடியது. இந்த சட்டப்பேரவையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இதனையடுத்து, தீர்மானம் மீது பேசிய அவர், நமது நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கு மத்திய அரசின் 3 சட்டங்களும் ஏற்றதாக இல்லை என கூறியுள்ளார். விளை பொருட்களை வாங்கும் தனியார்களுக்கே வேளாண் சட்டங்கள் சாதகமாக உள்ளது என்றும், மாநில விவசாயிகளுக்கு பயனில்லாத அந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆட்சியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவித்தார். வேளாண் சட்டங்களால் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றி தருமாறு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஆப்கானிலிருந்து சுதந்திரமாக பெல்ஜியம் திரும்பிய சிறுமியின் படத்தை பகிர்ந்து அந்நாட்டு பிரதமர் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி ஆட்சி அமைத்த நிலையில், அந்நாட்டு மக்கள், வெவ்வேறு நாடுகளுக்கு வெளியேறி வருகின்றன. அதுவும் தாலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆப்கானை விட்டு வேறு இடங்களுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிலிருந்து வெளியேறி பெல்ஜியம் நாட்டிற்கு வந்த சிறுமி, சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் துள்ளி குதித்து ஓடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்த புகைப்படத்தை பகிர்ந்த, பெல்ஜியம் நாட்டு பிரதமர் காய் வெர்ஹாப் ஸ்டாட் மற்ற நாடுகளிலிருந்து தஞ்சமடைவோருக்கு ஆதரவளித்தால், இது தான் விளைவு என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, பெல்ஜியத்திற்கு வரவேற்பதாக பதிவிட்டுள்ளார்.
