Author: Admin

சாத்தான்குளம் தந்தை ,மகன் படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் (ஜெயராஜ், பென்னிக்ஸ்) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படுகொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் காவலர் ரகு கணேஷ் , காவல் ஆய்வாளரான ஸ்ரீதர் தரப்பில் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் மேற்கண்ட இரண்டு மனுக்களும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவலர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘ஓராண்டு காலமாக சிறையில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் ரகு கணேஷ் ஆகியோரின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும். காவல்துறையினர் தாக்கியதால் தான் சாத்தான்குளம்…

Read More

தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று ஈயம், பித்தளையாக மாறியதற்கு யார் காரணம் என்று எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கேள்வி எழுப்பினர். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக மின்வாரியம் அதானி குழுமத்திடமிருந்து மின்சாரத்தை ஒரு யூனிட் ஏழு ரூபாய் என்று ஏன் வாங்கப்பட்டது? மகாராஷ்டிராவில் 5 ரூபாய்க்கு வாங்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் ஏழு ரூபாய்க்கு வாங்கப்பட்டது? ‘மேட்ச் பிக்சிங்’ என்று கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால் அதிமுக ஆட்சியில் மின்சாரம் கொள்முதலில் பர்ச்சேஸ் பிக்சிங் நடந்துள்ளதாக கூறிய அமைச்சர் . தங்கமாக இருக்க வேண்டிய தமிழக மின்சார வாரியம், ஈயம், பித்தளையாக மாறி பேரிச்சம்பழம் கடைக்கு போனதற்கு யார் காரணம்?” என கேள்வி…

Read More

ஆன்லைனில் மதுவிற்பனை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி : கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மட்டுமல்ல, மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கும் மறுவாழ்வு நிதி வழங்கப்படும் என கூறினார். மேலும் , மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் 74 சேவைகள் இணையவழி மூலம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என விளக்கம் கொடுத்த அமைச்சர், டாஸ்மாக் பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் 500 கூடுதலாக வழங்கப்படும் என்றும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Read More

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, கொரோனோ சமயத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த போது மின் கட்டணத்தை முந்தைய மாதக் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் மொபைலில் புகைப்படம் எடுத்து மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் அறிவித்தோம். ஆனால் திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு மே மாத கட்டணத்தை செலுத்த சொன்னதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறினார். முன்னாள் அமைச்சர் தங்கமணியின் இந்த கேள்விக்கு பதில் கூறிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: மின் கட்டணத்தை செலுத்த மக்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக கூறினார் . மேலும் மே மாதம் மின் உபயோகம் 32 சதவீதம் அதிகரித்து இருந்தாலும் குறைவாகவே கட்டணத்தை வசூலித்ததாக கூறினார். பின்னர் தொடர்ந்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின் மிகை மாநிலமாக இருப்பதாக தெரிவித்த அதிமுக அரசு, ஏன் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகள் வழங்கவில்லை என கேள்வி…

Read More

பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பைகள் உள்ளிட்ட பொருட்களில் இனி அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தக் கூடாது; இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இலவச புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு மாணவ்ர்களின் புத்த்க பைகளில் புகைப்படங்களை நீக்காமல் விநியோகித்தது. இதுதொடர்பாக பேரவையில் பேசிய கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், புகைப்படங்களை மாற்ற 13 கோடி செலவாகும் என்று தாம் கூறியதாகவும், அப்படியென்றால் அவர்கள் படமே இருந்துவிட்டு போகட்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் தலைவர்களின் படங்கள் புத்தகப் பைகளில் எதற்கு என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்குப் பதிலளித்த தமிழ்கஅரசு வழக்கறிஞர்…

Read More

இன்று சட்டசபையில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் 12 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலை தயாரிக்கும் 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும் சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் விநாயகர் சதுர்த்தி வழிபாடு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின் : கொரோனா பரவல் காரணமாக வரும் 30ம் தேதி வரை மக்கள் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆகவே கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Read More

திருக்கோயில்களில் மொட்டை போடும் 1,749 பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஐந்தாயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது மொட்டை போடும் பணியாளர்கள் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் கோவி செழியன் மற்றும் நந்தகுமார் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். அதில் பேசிய உறுப்பினர் நந்தகுமார், மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தின் மூலம் அதனை நம்பியிருந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் அந்த தகவல் உண்மையா? ஆம் எனில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருக்கோயில்களில் மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள கோயில்களில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால்…

Read More

கவனக்குறைவு என்றால் சரி செய்யப்பட வேண்டும் என்றும் கவனிக்கவே இல்லை என்றால் அரசு வருத்தம் உணர வேண்டும் என்றும் கருத்துகள் எழுந்துள்ள

Read More

இனி குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் தான் ஜாமீன் கொடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகிய இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட தகராறு காரணமாக பீர் பாட்டிலால் சுரேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், மதுபாட்டிலால் நண்பரை தாக்கிய வழக்கில் ஜாமின் கேட்டு சிவா, கார்த்திக் ஆகிய இரண்டு பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி தனது தீர்ப்பில் : மது அருந்தியதன் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆகவே மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்குவதாக கூறி வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Read More

கடும் நெருக்கடியான சூழல் இருப்பினும் அகவிலைப்படி அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.

Read More