Author: Admin

வாஷிங்டன். நமது நிருபர். ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட்டின் நிறவெறி கொலை வழக்கில் இழப்பீடாக 196 கோடி ரூபாய் அளிக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்த ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்ட், இவர் அங்கு லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு மே 25அன்று, இவர் ஒரு கடையில் பொருள் வாங்கிவிட்டு பணம் கொடுத்தார். அந்தப் பணத்தில் அவருக்கே தெரியாமல் ஒரு 20 டாலர் கள்ள நோட்டும் இருந்தது. எனவே கடையின் பணியாளர்கள் மினியாபோலீஸ் நகரக் காவல்துறைக்கு தகவல் சொல்ல அங்கு டெரிக் சாவின் என்ற அதிகாரி தலைமையில் 4 காவல்துறையினர் வந்தனர். அவர்கள் ஜார்ஜ் பிளாய்ட்-டிடம் அடக்குமுறையாக நடந்து காவல் வாகனத்தில் ஏறச் சொல்ல பிளாய்ட் அதற்கு மறுத்தார். உடனே டெரிக் சாவின் பிளாய்ட்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் கால் முட்டியால் அழுத்தினார். அப்போது, ‘அழுத்தாதீர்கள்… என்னால்…

Read More

நமது நிருபர். 1960களில் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் 190 படங்களுக்கும் மேல் நடித்தவர் பழம்பெரும் நடிகை ஜமுனா. தெலுங்குத் திரையுலகிற்கு மிகவும் பரிச்சயமான இவர் தமிழில் தங்கமலை ரகசியம், தெனாலி ராமன், தாய் மகளுக்கு கட்டிய தாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர். கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட இவர் தெலுங்குத் திரையுலகில்தான் வெற்றிகரமான கதாநாயகியாக விளங்கினார். 16 வயதிலேயே கதாநாயகியான இவர், திரைப்படத்தில் நடிப்பதைத் தவிர இயக்குநராகவும் திகழ்ந்தவர் . பின்னாட்களில் அரசியலிலும் ஈடுபட்டார். தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படங்களாக வந்து சக்கைபோடு போடுகின்றன. சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’சஞ்சு’, சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகா நடி’ ஆகியவை இந்திய அளவில் பெரும் வசூலைப் பெற்றவை. அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணவத் நடிக்கும் ’தலைவி’ படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.…

Read More

நமது நிருபர் சீனா, இந்தியா, வங்க தேசம் ஆகிய நாடுகளிடையே ஓடும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே அணை கட்ட உள்ளதாக சீனா தெரிவித்து உள்ளது. ஆசிய கண்டத்தில் ஓடும் வற்றாத ஜீவநதிகளில் ஒன்று பிரம்ம புத்ரா. இந்தியாவில் ஓடும் நதிகளில் ஆணின் பெயர் கொண்ட ஒரே நதி என்ற பெருமையும் இதற்கு உண்டு. தற்போது சீனாவின் தன்னாட்சிப் பகுதியாக உள்ள திபெத்தில் தொடங்கி சீனா வழியாக வந்து, இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் வாயிலாக இந்தியாவுக்குள் நுழைந்து, வங்க தேசம் வரையில் பாயும் பிரம்மபுத்ரா நதியால் 3 பெரிய நாடுகள் பயனடைகின்றன. இந்தியாவின் பல மாநிலங்கள் தங்கள் நீர் வளத்துக்கு பிரம்மபுத்ராவையே நம்பி உள்ளன. பிரம்மபுத்ரா நதி அருணாச்சல பிரதேசத்தில் நுழையும் இடத்திலேயே ஒரு அணையைக் கட்டி நதியைத் தடுக்கு ஒரு திட்டத்தைக் கடந்த ஆண்டு சீன அரசு வெளியிட்டது. இந்தத் திட்டம் குறித்த எதிர்ப்பை இந்தியாவும் வங்க தேசமும் சீனாவுக்கு தெரிவித்தன.…

Read More

நமது நிருபர் 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை எழுத்தாளர் இமையம் தனது செல்லாத நோட்டு நாவலுக்காகப் பெறுகிறார். இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 24 இந்திய மொழிகளில் எழுதப்படும் சிறந்த நூல்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது. இந்த விருதானது தாமிரப் பட்டயத்தையும் ரூ.1 லட்சம் தொகையையும் உள்ளடக்கியது. கடந்த 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதை எழுத்தாளர் இமையம் அவர்களின் ‘செல்லாத பணம்’ நாவல் பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வெ.அண்ணாமலை என்ற இயற்பெயர் கொண்ட இமையம் அவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். எளிய குடும்பப் பின்னணியும் வலுவான இலக்கிய அறிவும் கொண்டவர். திராவிட இயக்கம் சார்ந்த சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர். கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங்கதெ – ஆகிய நாவல்களையும், பல்வேறு சிறுகதைகளையும் இவர்…

Read More

நமது நிருபர் நடிகர் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் ’சியான் 60’ படத்தில் பாபி சிம்ஹா இணைய உள்ளார். நடிகர் விக்ரம் தனது 60ஆவது படத்தில் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார். பெயரிடப்படாமல் தொடங்கப்பட்டு தற்போது ‘சியான் 60’ என்று அழைக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். முதலில் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக இருந்தது பின்னர் சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக மாற்றி அறிவிக்கப்பட்டது. சியான் 60 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்நிலையில் தனது பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட படங்களில் நடித்தவரும், நெருங்கிய நண்பருமான பாபி சிம்ஹா சியான் 60 படத்திலும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் டுவிட்டரில் தற்போது அறிவித்து உள்ளார். அமைதியாகத் தொடங்கிய  சியான் 60…

Read More

இராமாயணத்தை அதிகம் வாசிக்காத நபர்களுக்குக் கூட அதில் உள்ள காண்டங்கள் எனும் பெரும் பிரிவுகளைப் பற்றித் தெரியும். சுந்தர காண்டம் அவற்றில் மிகவும் புகழ்மிக்கது.  இராமாயணத்தை வாசித்தவர்களுக்கு கம்பரின் இராமாயணத்தில் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு காண்டங்கள் இருப்பது தெரியும். இதன் தொடர்ச்சியாக ஏழாவது காண்டமான உத்தர காண்டத்தை ஒட்டக் கூத்தர் எழுதினார். ஆனால் ‘தியாகக் காண்டம்’ என்ற பெயர் அனைவருக்கும் புதிதானதாக, ஆச்சர்யம் தருவதாக இருந்திருக்கும். பலரும், ‘தியாக காண்டம் யார் எழுதியது?’ என்ற யோசனையிலும் இருப்பீர்கள். கம்ப இராமாயணத்தின் அயோத்தியா காண்டத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயரே தியாகக் காண்டம் என்பது ஆகும். இந்தக் காண்டத்தில் உள்ள தியாகங்களே இந்தப் பெயருக்குக் காரணங்களாக உள்ளன. அப்படி என்னென்ன தியாகங்கள் அயோத்தியா காண்டத்தில் நடந்தன? – வாருங்கள் பார்ப்போம்…. 1. தசரதன் தனது வாக்கைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைத்…

Read More

சுடரொளி சுவையால், சமைக்கும் முறையால், சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களால் உணவுகள் வகைப்படுத்தப்படுவதைப் போல, உண்ணப்படும் முறையாலும் உணவு வகைப்படுத்தப்படுகின்றது. இப்போது காபி, டீ-யில் ஆரம்பித்து சாப்பாடு, பிரசாதங்கள் வரை அனைத்தையும் ‘சாப்பிட்டேன்’ என்று சொல்வதே வழக்கமாகிவிட்டது. ஆனால் உணவானது அது வயிற்றுக்குள் செலுத்தப்படும் முறையை வைத்து 4 விதங்களாகப் பிரிக்கப்படுகின்றது. ஸ்ரீமத் பகவத்கீதையின் 15ஆவது அத்தியாயமான புருஷோத்தம யோகத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ‘அன்னம் பசாமி சதுர்விதம்’ என்று உணவு உண்ணுதலில் நான்கு விதங்கள் உள்ளதாகவும், அந்த நான்கு வித உணவுகளையும் ஜாடராக்னியாக இருந்து தானே எரிப்பதாகவும் கூறுகின்றார். எவை அந்த 4 வகைகள்? வாருங்கள் அறிந்து கொள்வோம்… முதல் வகை பக்‌ஷ்யம் அதாவது பற்களால் கடித்து மென்று உண்பது. இரண்டாவது வகை சோஷ்யம் அதாவது உறிஞ்சி சாப்பிடுவது. மூன்றாவது வகை லேஹ்யம் அதாவது நாவால் நக்கி சாப்பிடுவது. நான்காவது வகை போஜ்யம் அதாவது கடிக்காமல் அப்படியே விழுங்குவது. இவற்றில் பக்‌ஷ்யம் என்பதை…

Read More

நமது நிருபர் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ’டாக்டர்’ திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதியில் வெளியிடப்பட இருந்தநிலையில், தேர்தல் அறிவிப்பு காரணமாக அந்தப் படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது. இதனால் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றிருந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுவதாகவும், விரைவில் புதிய ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என்றும் டுவிட்டரில் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அதன்படி இப்போது புதிய ரிலீஸ் தேதியை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி வரும் ரம்ஜான் தினத்தன்று டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் இந்த அறிக்கையில், ரம்ஜான் அன்று டாக்டர் வருண் மற்றும் குழுவினரை சந்திக்கத் தயாராகுங்கள் என்றும், இந்த இடைப்பட்ட காலத்தில் படம் மெருகேற்றப்பட…

Read More

அமெரிக்கா நமது நிருபர். உலக அளவில் கொரோனாவின் பாதிப்பும் பலி எண்ணிக்கையும் அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. தொடக்கம் முதலே கொரோனா அமெரிக்காவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாலும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இயலாத காரணத்தாலும் அமெரிக்க மக்கள் வேலை இழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜனவரியில் ஜோ பைடன் தலைமையிலான புதிய அரசு அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்தது. ’கொரோனாவில் இருந்து நாட்டை மீட்டெடுப்போம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி அளிப்போம்’ – என்று தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்திருந்த ஜோ பைடன், அதற்காக ’கொரோனா நிவாரண நிதித் திட்டம்’ என்ற பிரம்மாண்ட மக்கள் நலத் திட்டத்தை அறிவித்தார். அமெரிக்காவில் உள்ள 85 சதவிகிதம் குடும்பத்தினருக்கு இந்த மாதத்திற்குள் தலா ஆயிரத்து நானூறு டாலர்கள் தொகையை அளிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கியப் பகுதி ஆகும். இதற்காக ஒரு லட்சத்து தொன்னூறாயிரம் கோடி அமெரிக்க டாலர்களை ஜோ பைடன்…

Read More

நமது நிருபர் 15 மாதங்களாக கொரோனா அச்சம் காரணமாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளாமல் இருந்த பிரதமர் மோடி இம்மாதம் மீண்டும் பயணம் செய்கிறார். இந்தியப் பிரதமர் மோடி கடந்த 2019ஆம் ஆண்டுவரை பல்வேறு உலக நாடுகளுக்கும் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு வந்தார். ஆனால் 2019ல் தலையெடுத்த கொரோனா அச்சம் காரணமாக அவரது அரசு முறைப் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கடந்த 15 மாதங்களாக எந்த வெளிநாட்டிற்கும் இந்தியப் பிரதமர் மோடி பயணங்களை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி விரைவில் மீண்டும் வெளிநாட்டுப் பயணங்களைத் தொடங்க உள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது. இந்தியாவின் அண்டைநாடும், 1971ஆம் ஆண்டில் இந்தியாவின் தலையீட்டால் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து உருவான நாடுமான வங்க தேசத்தின் 71ஆவது சுதந்திர தின விழா மார்ச் 26 அன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கவே அதே நாளில் பிரதமர் மோடி15 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள…

Read More