சியான் படத்தில் சிம்ஹா: கார்த்திக் சுப்பராஜ் அறிவிப்பு

SHARE

நமது நிருபர்

நடிகர் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் ’சியான் 60’ படத்தில் பாபி சிம்ஹா இணைய உள்ளார். 

நடிகர் விக்ரம் தனது 60ஆவது படத்தில் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார். பெயரிடப்படாமல் தொடங்கப்பட்டு தற்போது ‘சியான் 60’ என்று அழைக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.

சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். முதலில் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக இருந்தது பின்னர் சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக மாற்றி அறிவிக்கப்பட்டது. சியான் 60 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இந்நிலையில் தனது பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட படங்களில் நடித்தவரும், நெருங்கிய நண்பருமான பாபி சிம்ஹா  சியான் 60 படத்திலும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் டுவிட்டரில் தற்போது அறிவித்து உள்ளார்.

அமைதியாகத் தொடங்கிய  சியான் 60 குறித்த அப்டேட்கள் சிம்ஹாவின் வரவு குறித்த இந்த அறிவிப்பால் சூடு பிடித்துள்ளன. ‘ஏதோ வித்தியாசமான கேரக்டர் இருக்கும்’ என்று இந்த டுவிட்டரின் கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் தங்கள் யூகத்தை வெளியிடுகின்றனர்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹா அதற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரு லட்சத்தை அபராதமா கட்ட விருப்பமில்லை : சொகுசு கார் வழக்கில் விஜய் தரப்பு வாதம்

Admin

40 கல்யாணம் பண்ணுவேன் நான்: வனிதா பரபரப்பு பேட்டி!

Admin

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

வெளியானது சீயான் 60 படத்தின் புதிய போஸ்டர் !

Admin

ஷூட்டிங் ஸ்பாட்ல சுகாதார சீர்கேடா.. நடிகர் ஆமீர்கான் விளக்கம்

Admin

லடாக் பாரம்பரிய உடையில் மனைவியுடன் அமீர் கான் நடனம்.. வைரல் வீடியோ

Admin

சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்..புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…

Admin

எனக்கு எண்டே கிடையாது: நடிகர் வடிவேலு

Admin

பிரம்மாண்ட காவியம் பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

Admin

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்..!!

Admin

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினார் அமீர் கான்!

Admin

Leave a Comment