- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
இந்தியாவின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு இணங்கும்படி டுவிட்டருக்கு கடைசி வாய்ப்பினை மத்திய அரசு வழங்கியுள்ளது. டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு, புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான தகவல்களை வௌியிட கூடாது என்றும், இந்த கொள்கைக்கு ஒத்துப்போக வலைதளங்களுக்கு 3 மாதம் அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு மே 25ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் அரசின் கொள்கைக்கு இணக்கம் தெரிவித்தன. ஆனால் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக டுவிட்டர் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இந்நிலையில், டிஜிட்டல் விதிகளை கடைபிடிக்கும்படி டிவிட்டருக்கு இறுதி வாய்ப்பு அளித்து மத்திய அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் டுவிட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு வந்ததால்மீண்டும் டுவிட்டரில் ப்ளூ டிக் சேர்க்கப்பட்டது. பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டரில் உலக மெங்கும் உள்ள முக்கியமான அரசியல் தலைவர்கள், திரையுலகம் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் தங்களது கணக்கு இது தான் என்பதை உறுதிப்படுத்த ப்ளூ டிக் வசதியை டுவிட்டர் வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கு டுவிட்டர் நிறுவனம் வழங்கிய ப்ளூ டிக்கினை நீக்கியது. கடந்த ஆறு மாதமாக வெங்கைய நாயுடு தனது தனிப்பட்ட கணக்கை உபயோகப்படுத்தாமல் இருந்ததே ப்ளூ டிக் நீக்க காரணம் என டுவிட்டர் நிறுவனம் கூறியது. இந்நிலையில் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் டுவிட்டர் கணக்கில் மீண்டும் ப்ளூ டிக் வசதியை டுவிட்டர் வழங்கியுள்ளது.-…
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு அவருடைய மனைவி திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் அறிமுகமான தமிழக வீரர் நடராஜன். 2018 ஆண்டு ஜூன் மாதத்தில் நடராஜன் தனது பள்ளித் தோழியான பவித்ராவைத் திருமணம் செய்தார். நடராஜன் – பவித்ரா தம்பதியருக்கு அன்பிற்கு அடையாளமாய் கடந்த நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது.இந்நிலையில் திருமண நாளை இருவரும் நேற்று கொண்டாடினார்கள். இதையடுத்து நடராஜனை புகழ்ந்து இன்ஸ்டகிராமில் பவித்ரா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,நம் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை பகிர்ந்து கொள்கிறோம். உங்கள் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது. என் வாழ்க்கையின் காதலுக்கு திருமண நாள் வாழ்த்துகள் – என்று பவித்ரா கூறியுள்ளார்.- மூவேந்தன்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை தொடங்குமாறு பிரதமருக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்காக 27-1-2019 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. புதிதாக அமையவுள்ள மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிலம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்குள் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களும் பணிகளை செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்ய கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் தமிழக அரசு குழுவை அமைத்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராமப்புற நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ்வழியில் கல்வி பயில்வோர் – போன்ற நமது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனைக்…
ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது தமிழக அரசு. அதே சமயம், 27 மாவட்டங்களுக்கு தளர்வுகளும் 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்: தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் , இறைச்சிக் கடைகள் செயல்பட அனுமதி. அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்படலாம். கொரோனா பரவல் அதிகம் இருக்கும் 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் மெக்கானிக் கடைகள், ஹார்டுவேர் கடைகள், புத்தகக்கடைகள் இயங்க அனுமதி கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கட்டுப்பாடு தொடரும் சென்னையில் தொற்று குறைவதால் 27 மாவட்டங்களில் சென்னையும் அடங்கும்…
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியை தழுவினார். இதனையடுத்து ஜோ பைடன் வெற்றிபெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றன. ஆனால் ட்ரம்ப் அவரது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை இதனால் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் சமூகவலைதளங்களில் பதிவிட்டார். அவரது பதிவுகளால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள கேப்பிட்டல் கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் டிரம்பின் பேஸ்புக் , டுவிட்டர் போன்ற சமூகவலைதள பக்கங்கள் முடக்கபட்டன. இந்த நிலையில் தற்போது இந்நிலையில், டொனால்டு டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்த செயலுக்கு டிரம்ப் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.- மூவேந்தன்
கொரோனா வைரசின் முதல் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அப்போது அதிபராக இருந்த டிரம்ப் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். இந்நிலையில் தற்போது வெளியான செய்திகளில், உகானில் உள்ள ஆய்வகத்திலிருந்தே கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்கா அரசு கூறுகிறது. அதே சமயம் அந்த வைரஸ் அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து கூட வந்திருக்கலாம் என சீன அரசு பதில்கூறியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் தோற்றத்தை 90 நாட்களில் கண்டுபிடிக்குமாறு உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இதனால் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் ஆய்வகத்தில் இருந்தே பரவியது என அனைத்து தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்த சூழலில் முன்னாள் அதிபர் டிரம்ப், “நான் அப்போதே கூறினேன் சீன வைரஸ் உகான் ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது என்று… நான் கூறிய கருத்தை இப்போது எதிர் கட்சியினரும் சொல்லத் தொடங்கி விட்டனர். கொரோனாவைரசினை…
கம்போடியாவில் கண்ணி வெடிகளை கண்டுபிடித்து தங்கப்பதக்கம் வென்ற எலி தனதுபணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது. மகாவா (MAGAWA) என்ற எலி 7 ஆண்டுகளாக கண்ணி வெடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இதுவரை 39 கண்ணி வெடிகளையும், 28 வெடிக்காத குண்டுகளையும் கண்டுபிடித்துள்ளது. மகாவா வகை எலியானது வீடுகளில், வயல்களில் காணப்படும் எலி அல்ல மாறாக ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெரிய ரக எலி. கம்போடியாவில் மாகாவா செய்யும் உயிர்காக்கும் சேவையை அங்கீகரிக்கும் வகையில் , பிரிட்டனைச் சேர்ந்த கால்நடைகளுக்கான அறநிறுவனம் கடந்த ஆண்டு எலிக்கு தங்கப் பதக்கம் வழங்கியது. மகாவா எடை குறைவாக இருப்பதால், கண்ணிவெடிகள் இருக்கும் இடத்தை அதனால் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்க முடியும். கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பதற்காக அதற்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. மகாவா எலி 7 ஆண்டுகளாக கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் அதற்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் சுமார் 80 மில்லியன் வெடிக்கக்கூடிய கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அவை இருக்கும்…
டெல்லியில் தந்தை திட்டியதால் பிரதமர் மோடிக்கு இளைஞர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் வந்த அழைப்பு ஒன்றில் இளைஞர் ஒருவர் பிரதமர் மோடியை கொல்லப்போவதாக தெரிவித்துவிட்டு போனைத் துண்டித்துள்ளார். சம்பந்தப்பட்ட எண்ணை வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் கஜூரி ஹாஸ் பகுதியைச் சேர்ந்த சல்மான் அர்மான் என்ற இளைஞரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வீட்டில் தனது தந்தை திட்டிக்கொண்டே இருப்பதால் சிறை செல்வதற்காக இப்படி செய்ததாக கூறியுள்ளார். ஏற்கனவே கொலை குற்றத்திற்காக சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த அவர் சிறையில் இருக்கவே தனக்கு பிடித்துள்ளத்தாகவும் கூறியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவேந்தன்
