சீமானும் ராகவனும் பெண்களுக்கு பேராபத்தை விளைவிப்பவர்கள் : காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆவேசம்

SHARE

பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை, சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் திரு.சீமானின் செயல்பாடு வெட்கக்கேடானது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கண்டணம் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த வீடியோ விவகாரம் சர்ச்சையானதால் ,தான் வகித்த மாநில பொதுச் செயலாளர் பதவியை கே.டி. ராகவன் ராஜினாமா செய்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க பாஜகவில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இந்த சம்பவம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், இது சமூக குப்பை. ராகவனின் அனுமதியில்லாமல் அவரது தனிப்பட்ட இடங்களில் வீடியோ வைத்து எடுப்பது என்பதுதான் சமூக அவலம். இந்த வீடியோவை வெளியிட்ட நபரை (மதன் ரவிச்சந்திரன்) கைது செய்திருக்க வேண்டும்.

உலகில் எங்குமே நடக்காத ஒன்றை அவர் செய்துவிட்டார் என்று காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். சட்டப்பேரவையிலேயே ஆபாசப் படம் பார்த்துள்ளனர். அது தவறு. அதை விட்டுவிட்டு, ராகவன் தனது அறையில் செய்ததை வீடியோ எடுத்து வெளியிடுவது கேடுகெட்ட சமுகம் ஆகிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

யார், யாரோடு பேசுகிறார் என்பதை ஒட்டுக்கேட்பது, அதை பதிவு செய்வது, வெளியிடுவது எல்லாமே தவறு என கூறினார்.

இந்த நிலையில் சீமானின் கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பதிவில்:

திரு.சீமான் மீதும் கடந்த காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுவதாக கூறியுள்ள ஜோதிமணி.

சீமானின் இந்த பேச்சின் மூலம் தான் பாஜகவின் B Team தான் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார். எப்படியிருந்தாலும் திரு.சீமானின் இந்த செயல் வெட்கக்கேடானது என கூறியுள்ளார்.

மேலும் , சீமான்,ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி தமிழ்நாட்டு பெண்களுக்கு பேராபத்தை விளைவிப்பவர்கள் என்றும் , தமிழகம் குறிப்பாக நமது எதிர்காலமான இளைஞர்களும்,மாணவர்களும் இப்போதாவது சீமானின் பொய் முகத்தை புரிந்து கொண்டு அவரைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே நாம் தமிழ்ச் சமூகத்திற்கு செய்யும் பெருந்தொண்டு என கூறியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!

Admin

அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை… ரஜினிகாந்த் அறிக்கை

Admin

வேளாண் பட்ஜெட் 2024: `ஒரு கிராமம் ஒரு பயிர்` – ம.பியில் வென்ற திட்டம் தமிழ்நாட்டில் வெல்லுமா?

Pamban Mu Prasanth

பெண்கள் தின வாழ்த்தெல்லாம் நாடகமா? இதுதான் திராவிட மாடலா?

Admin

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 4,867 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Admin

தவறாகப் பரப்பப்படுகிறதா… சீமான் பேசியது என்ன?

Admin

அமித்ஷா பெரிய சங்கி… அண்ணாமலை சின்ன சங்கி… கலாய்த்த திருப்பூர் பாஜகவினர்…

Admin

‘ஊரை ஏமாற்றும் அண்ணாமலையே..ராஜினாமா செய்’- ஜோதிமணியின் காட்டமான அறிக்கை

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

Admin

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth

இயல் இசை நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்!

Admin

‘‘லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளனர்’’ : மகேந்திரன் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

Admin

1 comment

Leave a Comment