ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு-2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு 2 5ஜி மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை கடந்த ஜூலை மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.இதில் 12 ஜிபி ரேம், 32 எம்பி செல்ஃபி கேமரா, 50 எம்பி பிரைமரி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1200-ஏஐ பிராசஸர் ஆகிய சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருந்தது.
இதனை தனது தந்தைக்கு வாங்கிய நபர் ஒருவர் வெடித்து சிதறியதாகவும், கட்டில் மீது எரிந்துகண்டிருந்த போனை தனது தந்தை தட்டி விட்டதாகவும் புகார் தெரிவித்தார். அவர் புகைப்படங்கள் எதுவும் வெளியிடாத நிலையில், அவரின் ட்விட்டர் பதிவு அடுத்த சில மணி நேரங்களில் அழிக்கப்பட்டது.
இந்நிலையில் ட்விட்டரில் ஒன்பிளஸ் நிறுவனம் அந்த நபருக்கு பதில் அளித்துள்ளது. அதில், “எதிர்பாராதவிதமாக அரங்கேறிய சம்பவத்தால் உங்களின் தந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நம்புகிறோம்.
இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, இதற்கான காரணத்தை கண்டறிய தயவு செய்து தகவல் அனுப்புங்கள்” என தெரிவித்துள்ளது.