அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 34 இன்ஸ்பெக்டர்கள்… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

SHARE

மேற்கு மண்டலத்தில் அதிமுக ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட 34 காவல் ஆய்வாளர்களை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி உயர் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தை நிர்வாக வசதிக்காக 4 மண்டலங்களாக காவல்துறையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் மிகவும் செழிப்பான மண்டலமாக மேற்கு மண்டலம் இயங்கி வருகிறது.

இந்த மண்டலத்தில் தான் அதிமுகவின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, அன்பழகன் ஆகியோர் தொகுதிகள் உள்ளன.

இதனால் அதிமுக ஆட்சியின்போது மேற்கு மண்டலத்தில் காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள் முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கமான நபர்களை மட்டும் தான் பணியமர்த்தி இருந்தனர்.மேற்கு மண்டலத்தில் அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற இவர்களின் பங்கு மிகவும் முக்கியமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் தேர்தல் நேரத்தில் அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பணியிடாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று 67 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக மேற்கு மண்டலத்தில் பணியாற்றி வந்த 34 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

’எய்ம்ஸ் போல இருக்காது’ வானதி ஸ்ரீனிவாசனை சட்டப்பேரவையிலேயே கலாய்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Pamban Mu Prasanth

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் தாக்கம்..? வனதுறையினர் விளக்கம்

Admin

ரூ.176 கோடி சொத்து… ரூ.300 கோடி நட்டம்: கண்ணைக் கட்டும் கமல் கணக்கு…

கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

உதவி கேட்ட பவானி…கரம் நீட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Admin

அதிமுகவில் மீண்டும் சசிகலாவா?, கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காதது ஏன்?- ஈபிஎஸ் பேட்டி

Admin

இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.

தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.!!

Admin

முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்தார் ரஜினிகாந்த்

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

Admin

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி மீது நடிகை குட்டி பத்மினி புகார்!.

Leave a Comment