மக்களைக் கொல்ல மனமில்லை!: அகதியான அதிகாரி

SHARE

மியான்மர் இராணுவத்தினர் பொதுமக்களைக் கொல்ல உத்தரவிட்டதால் ஒரு இராணுவ அதிகாரி இந்தியாவில் அகதியாகத் தஞ்சம் புகுந்துள்ளார்.

தமிழர்களுக்கு பர்மா என்ற பெயரில் பரிச்சயமான நாடுதான் மியான்மர். இங்கு அடிக்கடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கவிழ்ப்பது உண்டு. தற்போதும் அங்கு இராணுவ ஆட்சியே நடைபெற்று வருகின்றது.

அடக்குமுறைகள் நிறைந்த இராணுவ ஆட்சியை பர்மிய மக்கள் வெறுக்கிறார்கள். இதனால் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் அங்கு வலுவடைந்து உள்ளன. அதே சமயம் மியான்மரின் இராணுவமும் போராட்டக்காரர்கள் ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்து வருகின்றது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களைக் கொல்ல தனது உயர் அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், அதனைச் செய்ய மனம் வராமல் குடும்பத்தோடு மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு வந்து அகதியாக தங்கி உள்ள ஒரு அதிகாரியின் கதை ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

மியான்மரின் காம்பாட்நகரில் பிப்ரவரி 27ஆம் தேதியன்று போராட்டக் காரர்களை சுட்டுக் கொல்லும்படியான உத்தரவு தா பெங் என்ற இந்த அதிகாரிக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவரும் அவரது 6 நண்பர்களும் அதை செய்யாமல் இருக்க மேல் இடத்தில் இருந்து அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

உடனே வேலையை ராஜினாமா செய்த தா பெங், மார்ச் 1ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் மியான்மரில் இருந்து ரகசியமாகக் கிளம்பி, மூன்று நாட்கள் பயணத்தில் மிசோரம் வழியாக இந்தியாவை அடைந்து இருக்கிறார். இவர் கூறிய தகவல்கள் உண்மையானவை என்று சர்வதேச செய்தி நிறுவனமான ராய்டர்ஸ் உறுதி செய்து உள்ளது.

இனி மீண்டும் மியான்மரில் மக்களாட்சி மலர்ந்தால்தான் இவரால் நாடு திரும்ப இயலும். ஆனாலும் இவரது கருணை கண்டிப்பாக எதிர்காலத்தில் போற்றப்படும்.

நமது நிருபர்

Photo courtesy: GettyImages


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வாய்க்கு போடும் பூட்டு.. உடல் எடையை குறைக்க ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

Admin

டுவிட்டர் தடையின் எதிரொலி… நைஜீரியாவில் கால் பதிக்கும் இந்திய செயலி….

Admin

வீட்டிலிருந்து வெளிவர தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: சவுதி அரசு

இன்று நெல்சன் மண்டேலா தினம்!. மண்டேலா குறித்து அறியப்படாத 20 தகவல்கள்…

உங்க உதவிய அமெரிக்கா மறக்காது.. : ஆண்டனி பிளிங்கன்

Admin

நான் தான் அப்பவே சொன்னேனே.. சீனாவை வம்பிழுக்கும் டிரம்ப்!

Admin

தாலிபான்களுக்கு தண்ணி காட்டும் தீவிரவாத அமைப்பு… அதிர்ச்சியில் உலக நாடுகள்…

Admin

கூடிய சீக்கிரம் டெல்டா கொரோனா உலகை ஆக்கிரமிக்கும்: எச்சரிக்கும் WHO

Admin

விண்வெளிக்கு பயணிக்கும் அமேசான் நிறுவனர்…!

Admin

15 கோடி மக்களுக்கு கொரோனா… அபாயத்தை உணர்த்தும் புள்ளிவிவரம்.

சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா..6300 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் தப்பிய பெண்கள்- வைரல் வீடியோ

Admin

நடக்க முடியாத மகனுக்காக தந்தை உருவாக்கிய ரோபோ உடை

Admin

Leave a Comment