பிக் பாஸ் நாட்கள். நாள் 24 ‘நானும் தலைவர்தான்..!’

SHARE

‘ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க…’ பாடலுடன் தொடங்கியது நாள். நெருப்பு வாரம் என்று தொடர்ந்து மூன்று நாள் நெருப்பு சம்பந்தப்பட்ட பாடல் போட்ட பிக் பாஸ், அன்று இந்தப் பாட்டை ஏன் போட்டார் என்றே தெரியவில்லை…

காலையில் காபி குடிக்க ராஜூ, சிபி கிச்சனில் நுழைய, ’காயின் இல்லாம  எப்படி கிச்சனுக்கு வந்தீங்க?’ என்று கேட்டு, ’நான் காயின் வெச்சதுக்கு அப்புறம்தான் சமைக்கணும்’ என்று திட்டமாக கூறினார் இசைவாணி. 

ஊருவிட்டு ஊருவந்து டாஸ்க்கில் (புரிஞ்சிட்டு…), அனைவரும் கிராம, நகர கெட்டப்பில் கிளம்பி தயாராகினர். இதில் சுருதி மற்றும் பாவ்னி எதிலும் ஒட்டாமலே இருந்தனர். பிக் பாஸிடம் கேட்டும் எந்த பதிலும் வராததால், எப்படி நடந்துக் கொள்வது என்று புரியாமல் இருந்தனர் பாவ்னியும், சுருதியும். ’காயினை பார்த்தால் வெறுப்பாக உள்ளது’ என்று வாழ்க்கையே வெறுப்பது போல் புலம்பிக் கொண்டிருந்தார் சுருதி. ஏன் பிக் பாஸ், அந்த பொண்ண கூப்பிட்டு கொஞ்சம் பேசுங்க பாஸ் – என்றிருந்தது.

கிராமமா? நகரமா? – டாஸ்கிற்கு, கார்டனில் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர் ஹவுஸ்மேட்கள். கிராமப்புறம் பக்கம் இருந்த சின்னபொண்ணு தனது பாடலாலும், தாமரை, அக்ஷரா, ஐக்கி ஆகியோர் தங்களின் ஆடலாலும், கிராமப்புற வாழ்க்கையை எடுத்துக்காட்டினர். கிராமப்புற மக்கள் என்பதால், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கிராமிய உணவுகளைதான் உண்ணவேண்டும் என்பதும் விளையாட்டின் விதி. இதனால் தாமரை தயாரித்த கூழை, ராஜூ சப்புக் கொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதே போல் நகர்புற ஆட்கள் சான்விச், பாஸ்தா என்று சமைத்து, கிராமபுற ஆட்களை வெறுப்பேற்ற, கிராமிய அணியில் இருந்த அக்ஷராவும், ஐக்கியும் ’சாண்ட்விச்சாடா திங்குறீங்க?’ன்னு, பிரட்டை எடுத்து ஒளித்து வைத்தனர்.  

பிக் பாஸ் இசைவாணியை கூப்பிட்டு ’இது உங்கள் வாரம், தலைவர் மாதிரி நடந்துக் கொள்ளுங்கள், மற்றவர்களுக்கு கட்டளையிடுகள்’ என்று காரித்துப்பி அனுப்பினார். பிறகு வெளியே வந்த இசைவாணி ’தயவு செய்து எதுவா இருந்தாலும் என்ன கேட்டு செய்யுங்க… அப்படி இல்லைனா தண்டனை வழங்கப்படும்’ என்று கூறினார். இந்த கூட்டதில் மதுமிதா தன் பிரச்சனையையும் ஹவுஸ்மேட்ஸிடம் தெரிவித்தார். மொழி பிரச்னையாலும், மெல்லிய குரல் காரணமாகவும் தன்னை யாரும் சட்டை செய்யவில்லை என்றும் ’தயவு செய்து நான் சொல்வதையும் கேளுங்க’ என்றும் கூறினார், (ஆனால் இதையும் மதுமிதாவிற்காக பிரியங்காதான் விளக்கிக் கூறினார்.) 

அடுத்த அடுத்த லக்சரி பட்ஜெட் டாஸ்க்குகள் பிக் பாஸ் நடத்தினார். அவற்றுக்கு அதற்கு பிக் பாஸ் கரன்சிகளும் தரப்பட்டன. இதை வைத்து சிறுபிள்ளைத்தனமாக, சோறு வேணும், குழம்பு வேணும் என்று மாற்றி மாற்றி சாப்பாட்டுக்கு போட்டி போட்டிக் கொண்டிருந்தனர் ஹவுஸ்மேட்கள். பார்ப்பதற்கு இவங்கல்லாம் எதுக்காக வந்திருக்காங்கன்னு இவங்களுக்கே தெரியுமா… இல்லையா? – என்று இருந்தது.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிற்ப இலக்கணம். பகுதி 3: தொழிற் கை முத்திரையின் வகைகள் (1-4)

பிக்பாஸ் நாட்கள்… தொடக்க‌ நாள். யார் அந்த பங்கேற்பாளர்கள்?

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 2: 32 வகை கை முத்திரைகள்.

பிக்பாஸ் நாட்கள்… நாள் 5: காதல்… திருமணம்… தற்கொலை… பாவ்னியின் கதை.

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள்: நாள் 2. எல்லாமே கதையா கோப்பால்?

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 1: சிற்ப இலக்கணம் ஒரு அறிமுகம்.

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 6: தொழிற் கை முத்திரையின் வகைகள் (13 – 16)

பிக்பாஸ் நாட்கள். நாள்: 23 “காசைக் காணோம்!”

சே.கஸ்தூரிபாய்

பிக் பாஸ் நாட்கள். நாள்: 9. ’பிரியங்காவுக்கு டிஸ்லைக்!’

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள் – 20. “பல்லைப் பிடுங்கிய கமல்”

இரா.மன்னர் மன்னன்

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 3: வேலு தாத்தா

Admin

Leave a Comment