‘’மதனுக்கும் அந்த பெண்ணிற்கும் டி.என்.ஏ சோதனை நடத்துங்க ’’ – கொந்தளித்த இந்து முன்னணி தலைவர்!

SHARE

விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழகத்தில் கொண்டாடுவது பற்றி இந்து முன்னணியினர் கோவை ராம் நகர் பகுதியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து முன்னணி தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை உருவாக்கி உள்ளதாக கூறினார்.

மேலும், இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து வருவதால் ரமலான், பனிமயமாதா திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களும் கொண்டாடப்பட்டன. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை படுஜோராக நடைபெற்றுவருகிறது.

ஆகவே இந்த ஆண்டு அரசு அனுமதியுடன் விநாயகர் சதுர்த்திக்கு தமிழகத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் விநாயகர் சிலை வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு ஊர்வலம் நடத்த அரசு அனுமதி வழங்கவேண்டும் என கூறினார்.

தொடர்ந்து பா.ஜ.க பிரமுகர் கே.டி.ராகவன் விவகாரத்தில் வீடியோ வெளியிட்ட நபர் மதன்ரவிச்சந்திரன் குறித்து பேசிய சுப்பிரமணியம், ”மதன் மன நலம் சரியில்லாத நபர், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தொகுப்பாளராக வரும் பெண்ணை மதன் பல ஊர்களுக்கு கூட்டிக்கொண்டே சுற்றியுள்ளார். எனவே அந்த பெண்ணிற்கும், மதனுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும்” எனக் கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலி : வேலூர் இப்ராஹிம்

Admin

கொடநாடு வழக்கில் புதிய திருப்பம் … என் தம்பிய திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்!

Admin

சார் அது டைப்பிங் மிஸ்டேக் .. கொங்குநாடு விவகாரம் விளக்கம் கொடுத்த அண்ணாமலை!

Admin

முதல்வரை அறைவேன் எனக் கூறிய மத்திய அமைச்சருக்கு ஜாமீன்!

Admin

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் பேச்சால் அதிர்ச்சி

Admin

“தெய்வம் நின்று கொல்லும்” – கே.டி.ராகவன் விவகாரத்தில் கடுப்பான காயத்ரி ரகுராம்

Admin

ஊரடங்கு நீட்டிப்பு?: முதலமைச்சர் ஆலோசனை!

Admin

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 4,867 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Admin

நிதிக்காக இணையவில்லை, உதயநிதிக்காக திமுகவில் இணைந்துள்ளேன்… தோப்பு வெங்கடாச்சலம்!

Admin

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

Admin

முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு ரூ. 2,000 கோடி ஊழலா?

Admin

செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து!

Admin

1 comment

இதுதான் STING OPERATION ஆ? மதன் செய்த வேலைக்கு பெயர் என்ன? - Mei Ezhuththu August 28, 2021 at 7:04 pm

[…] ‘’மதனுக்கும் அந்த பெண்ணிற்கும் டி.என…ஸ்டிங் ஆப்பரேஷன்கள் என்றால் என்ன என்பதை எளிமையாக விளங்கிக் கொள்வோம். சமூகத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய அல்லது ஒரு சட்டவிரோத குற்றச் செயலைக் கையும் களவுமாக ஆவணப்படுத்தும் நோக்கில், மறைமுகமாக நடத்தப்படும் இரகசிய திட்டங்களுக்கு ஸ்டிங் ஆபரேஷன்கள் என்று பெயர். தமிழில் இதனை புலனாய்வு என்றும் சிலர் சொல்வதுண்டு. அது தவறு. எந்த ஒளிவு மறைவுகளோ, கூடுதல் ஆய்வு முடிவுகளோ இல்லாத, குற்றத்தை மட்டும் ஆவணப்படுத்தும் ஆதாரத்தை திரட்டும் நிகழ்வுதான் ஸ்டிங் ஆப்பரேஷன். அதாவது குற்றவாளியால் குற்றத்தை மறுக்கமுடியாத அளவுக்கான வலுவான ஆதாரத்தை ஸ்டிங் ஆப்பரேஷன்கள் மூலம் திரட்டலாம். ஆனால், அந்த ஆதாரங்கள் எதுவும் துளி கூட மாற்றப்பட்டோ, திருத்தப்பட்டோ இருத்தல் கூடாது. மார்ஃபிங் செய்தல், வெட்டி ஒட்டுதல் என எந்தவிதமான மனிதவேலைப்பாடுகளுமற்று இருந்தால்தான் அது சந்தேகத்துக்கிடமில்லாத ஆவணம். அதுபோக, ஆதாரத்தை திரட்டும் இந்த இரகசிய நபர் மூன்றாவது நபராக இருக்க வேண்டும். மாறுவேடத்தில் குற்றச் செயல்புரியும் கும்பலோடு இருந்தாலும் (இரகசிய போலீஸ் மாதிரி) ஆவணம் வெளிவரும்போது இவர் செய்தவற்றில் நல்நோக்கம் இருந்தால் மட்டுமே இவர் மன்னிப்புக்குரியவர். இல்லாவிட்டால் இவரும் குற்றமிழைத்தவராகவே கருதப்படுவார். ஏனெனில், ஒருவருக்குத் தெரியாமல் அவரது செயல்களை பதிவு செய்யும் முறை என்பது சட்டவிரோதமானதுதான். இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21 வழங்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை எல்லா தனிமனிதர்களுக்கும் வழங்குகிறது. இது மீறப்படும்போது அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது என்பதுதான் பொருள். […]

Reply

Leave a Comment