டெல்டா வகை கொரோனாவின் ஆதிக்கம் இன்னும் சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு தற்போதுவெளியிட்டுள்ள தகவலின் படி உலகின் 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா பரவியுள்ளது.
ஆனாலும் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா எல்லா நாடுகளிலும் பரவும் என்பதைஉறுதியாகக் கூற முடியாது.
காரணம் பல நாடுகளில் கொரோனா கண்டறிவதற்கான வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதால், கணக்கில் வராமல் டெல்டா வகை கொரோனா மக்களிடையே பரவிக் கொண்டிருக்கலாம்.
அதே சமயம்டெல்டா கொரோனாவின் வேகமும் தற்போது அதிகரித்து வருவதால், இன்னும் சில மாதங்களில் உலகம் முழுவதும் அந்த வகைக் கரோனாவே ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படும்.
ஆகவே நம்மிடம் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவையே டெல்டா உள்ளிட்ட புதிய வகை கொரோனாவினை எதிா்கொள்ள போதுமானது என கூறியுள்ளது.