இங்கிலாந்தில் இருக்கும் இளைஞர்களில் 50% பேர் கடந்தாண்டு கொரோனா ஊரடங்கில் ஆபாச படம் பார்த்ததாக தரவுகள் தெரிவித்துள்ளன.
கொரோனா முதல் அலை பரவலால் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டது. இந்த நேரத்தில் வீடுகளில் முடங்கியிருந்த பொதுமக்கள் போன்களில் நேரத்தை செலவிட்டனர்.
இதனிடையே ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் வீடியோ தளங்களை முறைப்படுத்தும் விதமாக ஆன்லைன் அடல்ட் கன்டென்ட் தொடர்பாக ஆய்வு தரவு ஒன்றை வெளியிட்டுள்ள மீடியா ரெகுலேட்டர் அப்காம் நிறுவனம், இங்கிலாந்தில் இருக்கும் இளைஞர்களில் சரிபாதி பேர் ஆபாச வலைத்தளம் மற்றும் செயலிகளை உபயோகித்துள்ளதாக கூறியுள்ளது.
குறிப்பாக செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 26 மில்லியன் பேர் இந்த வலைத்தளம் மற்றும் செயலிகளை பயன்படுத்தி உள்ளனர்.
இதில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த மொத்த எண்ணிக்கையில் 4இல் 3 பங்கு பேர் 13 முதல் 19 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.