தாலிபான்கள் ஆட்டம் ஆரம்பம்: விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை

SHARE

ஆப்கானிஸ்தானில் விளையாட்டுகளில் பெண்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளது விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை முழுவதும் நாட்டை விட்டு முழுவதும் வெளியேறிய நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே பிரதமர், துணை பிரதமர், ராணுவ அமைச்சர், வெளியுறவு அமைச்சர், துணை வெளியுறவு அமைச்சர் ஆகிய பதவிகளுக்கான தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கிரிக்கெட் உட்பட எந்த விளையாட்டிலும் விளையாட பெண்களுக்கு அனுமதியில்லை என தாலிபான்களின் கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவர் அஹ்மதுல்லா வாசிக் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் விளையாட்டு என்பது பெண்களுக்கான முக்கியமானதாக பார்க்கப்படவில்லை என்றும், கிரிக்கெட்டில் பெண்கள் அவர்கள் முகம் மற்றும் உடலை மறைக்காத சூழ்நிலை ஏற்படுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். நாங்களும் எங்கள் இஸ்லாமிய விதிகளை விடமாட்டோம்.

அதேசமயம் ஷாப்பிங் போன்ற தேவைகளின் அடிப்படையில் பெண்கள் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும் அஹ்மதுல்லா வாசிக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இத்துடன் யாகூ செய்திகள் நிறைவடைந்தன..

Admin

டுவிட்டர் தடையின் எதிரொலி… நைஜீரியாவில் கால் பதிக்கும் இந்திய செயலி….

Admin

எங்களை கைவிட்டு விட்டுவிடாதீர்கள்… கதறும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்

Admin

ஆப்கானில் ஆட்சியமைக்கும் தாலிபான்கள் : பதவி விலகும் அதிபர்

Admin

நாங்கள் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை ..தாலிபான்கள்!

Admin

தாலிபான்களுக்கு தண்ணி காட்டும் தீவிரவாத அமைப்பு… அதிர்ச்சியில் உலக நாடுகள்…

Admin

வெற்றிகரமாக ஸ்பேஸுக்கு சென்று திரும்பிய அமேசான் நிறுவனர்!

Admin

இன்னும் 90 நாட்களுக்குள் காபூல் தாலிபன்களிடம் வீழும் : அமெரிக்கா எச்சரிக்கை

Admin

வெடித்த மேகன் மார்கல்… விளக்கம் கொடுக்கும் இங்கிலாந்து ராணி… நடந்தது என்ன?

Admin

விண்வெளியில் தனக்கென தனி சாம்ராஜயம்.. ஆய்வு கூடத்திற்கு 3 வீரர்களை அனுப்பியது சீனா

Admin

ரத்த ஆறு ஓடுவதைத் தடுக்கவே நாட்டைவிட்டு வெளியேறி உள்ளேன்.. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி

Admin

அமெரிக்காவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி!

Admin

Leave a Comment