நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றியை தழுவி மு.க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றார். பதவியேற்று கொண்ட அதே நாளில் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வாகினர். இந்நிலையில் தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 21-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கலைவாணர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.சபாநாயகர் அப்பாவு இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.
அந்த சந்திப்பிற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, சட்டப்பேரவை கூட்டத் தொடரை நேரடியாக ஒளிபரப்புவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அது நிறைவேற்றப்படும். ஜனநாயக முறைப்படி விருப்பு வெறுப்பின்றி அனைவருக்கும் பேச நேரம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆளுநரை சபாநாயகர் சட்டபேரவைக்கு அழைப்பது வழக்கம். அதன் படி, ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தேன் என்றும் கூறினார்.