உலகின் மிகச் சுவையான மாம்பழ வகை எது?

SHARE

உலகின் மிகப் பழமையான பழ மரங்களில் மாமரங்களும் ஒன்று. 2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கூட மா மரங்கள் இருந்துள்ளன. தமிழர்கள் முக்கனிகளில் ஒன்று என்று மாம்பழத்தைக் கூறுகின்றனர். சங்ககாலத் தமிழ் அரசர்கள் பலர் தங்கள் அரச மரமாக மாமரத்தை அறிவித்த குறிப்புகள் சங்க இலக்கியங்களில் உண்டு. மேலும் தாய் தந்தையை சுற்றி வந்து விநாயகர் பெற்ற ஞானப் பழமும் மாம்பழம் என்றே பக்தர்கள் நம்புகின்றனர்!.

மாம்பழத்திற்கு இவ்வளவு நீண்ட நெடிய வரலாறு இருந்தாலும் இந்தியாவைச் சுற்றிய பகுதிகளில் மட்டுமே மாம்பழங்கள் நெடுங்காலமாக அறியப்பட்டிருந்தன. பர்மா, வங்கதேசம் ஆகிய நாடுகளில்தான் மா மரங்கள் முதன்முதலாக தோன்றியதற்கான தடயங்களும் கிடைத்து உள்ளன.

இந்தியாவில் இருந்து மதம் பரப்பச் சென்ற புத்த துறவிகள்தான் பிற ஆசிய நாடுகளுக்கு மாம்பழங்களை அறிமுகப்படுத்தினர், பின்னர் அரேபிய வணிகர்கள் பல நாடுகளுக்குக் கொண்டு சேர்த்தனர். இந்தியாவுக்கு வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்களால் மாம்பழம் ஐரோப்பாவுக்கும் அறிமுகமானது. இன்று உலகின் எல்லா நாடுகளிலும் மாம்பழத்திற்கு ரசிகர்கள் உள்ளனர். உலகின் மிகச் சுவையான பழங்களில் ஒன்று என்று மாம்பழம் ஏற்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அதிகம் விளையும் பழமும், நமது தேசியப் பழமும் மாம்பழமே!.

இந்தியாவில் மாநிலங்களைப் பொருத்து மாம்பழ ரகங்கள் உள்ளன. கர்நாடகாவின் மல்கோவா, குஜராத்தின் ஜமதார், கோவாவின் அல்போன்ஸா என்று இவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம் இப்படியாக 20க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்தியாவை ஆண்ட பேரசர்களும், விவசாயிகளும் புதிய புதிய மாம்பழ ரகங்களை உருவாக்கி உள்ளனர். இன்னொரு மரத்தின் கிளையில் வெட்டி ஒட்டி இணைக்கப்படும் ஒட்டு மாங்காய் இந்திய விவசாயத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று!. 

உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு மாம்பழங்கள் உண்டு. அமெரிக்காவின் புளோரிடாவில் டாமி அட்கின்ஸ் என்ற மாம்பழ ரகம் உள்ளது. சற்று நீல நிறமாகக் காட்சிதரும் இந்த மாம்பழத்தில் அதிக சுவை இருக்காது. ஆனால் இவை கடினமான தோலை உடையவை என்பதால், மாம்பழமே விளையாத பல நாடுகளுக்கு இதுதான் ஏற்றுமதி ஆகின்றது!.

உலகெங்கும் உள்ள பல வகை மாம்பழங்களில் சிறந்தது எது?. அனைத்து மாமரங்களுமே பழங்களுக்காக வளர்க்கப்படுவது இல்லை. காய்களின் புளிப்புச் சுவைக்காகவே சில ரகங்கள் வளர்க்கப்படுகின்றன. தமிழ் இலக்கியத்தில் உள்ள தேமா – என்ற சொல் தேன் போல இனிப்பான மா வகையையும், புளிமா – என்ற சொல் புளிக்கக் கூடிய மா வகையையும் குறிக்கும். உதாரணமாக ஆவக்காய் வகையானது காயில்தான் சிறப்பாக இருக்கும். அது பெரும்பாலும் ஊறுகாய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. ஒட்டு மாங்காய் சமையலுக்கு சிறந்தது. பழங்களாகச் சாப்பிடுவது என்றால் அதிக இனிப்பும் சுவையும் உள்ள மாம்பழ வகை அல்போன்ஸாதான். ஆனால் அனைத்து அல்போன்ஸா மாம்பழங்களும் சுவையானவை அல்ல!.

சற்று குழப்புகிறது அல்லவா?. மாம்பழத்தின் சுவைக்கு அதன் வகையைவிட விளையும் இடமே மிக முக்கிய காரணமாக உள்ளது. சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள இடங்களில் விளையும் மாம்பழங்களே மிகவும் தரமானவை. இவற்றின் தோலை உரிக்கும்போது பழத்தோடு ஒட்டாது, அதிகம் நார் இருக்காது. வெட்டக் கத்தி கூட தேவைப்படாது, கரண்டியைக் கொண்டு ஐஸ்கிரீமை அள்ளுவது போல அள்ளலாம். 

இந்தியாவில் இப்படிப்பட்ட முதல் தரமான பழங்கள் சேலம் சுற்றுப்பகுதிகளில் விளைகின்றன. இவை சேலத்து மாம்பழங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சேலத்து மாம்பழங்களில் மல்கோவா , பெங்களூரா, கிளிமூக்கு, செந்தூரா, இமாம்பசந்த், பங்கனப்பள்ளி எனப் பல வகைகள் உள்ளன இவை அனைத்துமே சுவையானவைதான். அதனால்தான் மற்ற பழங்களில் ரகத்தைப் பார்த்து வாங்கும் தமிழர்கள், மாம்பழங்களில் விளையும் பகுதியைப் பார்த்து வாங்குகின்றனர்!. 

இதோ மாம்பழ சீசன் தொடங்கி இருக்கிறது. நல்ல சுவையான பழங்களை ஒரு கை பாருங்கள். கற்களை வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களை தவிருங்கள். தானாகப் பழுத்த பழத்தை எப்படிக் கண்டுபிடிப்பது? – என்கிறீர்களா?. மாம்பழங்கள் பொதுவாகவே நான்றாக வாசம் வீசக் கூடியவை. கல்வைத்து பழுத்த மாம்பழங்களில் வாசனை அதிகம் இருக்காது. இது ஒன்றே நல்ல பழத்தைக் கண்டுபிடிக்கப் போதுமானது.

  • இரா.மன்னர் மன்னன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இராமாயணத்தின் தியாகக் காண்டம் தெரியுமா?

Admin

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

Admin

சிற்ப இலக்கணம். பகுதி 4. தொழிற் கை முத்திரையின் வகைகள் (5 – 8)

பாசுபத சமயத்தின் விநாயகி சிலை கண்டுபிடிப்பு!. விநாயகர் வழிபாடு பிற மதங்களில் இருந்ததற்கு மற்றுமொரு சான்று!.

இரா.மன்னர் மன்னன்

கல்கி ஒரு சகாப்தம் – கல்கி பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

Nagappan

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் : ஆசிரியர் தினம் பிறந்த கதை தெரியுமா

Admin

ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

எங்கே செல்லும் இந்தப் பாதை? – அக்னிபாத் கிளப்பும் கேள்விகள்…

உணவு எடுத்துக் கொள்ளுதலின் 4 வகைகள்: கீதை சொல்வது என்ன?

Admin

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

World Letter Writing Day : கடிதங்களை சாதாரணமா நினைக்காதீங்க

Admin

’ஜெய்பீம்’ படத்தில் வரும் ராஜாக்கண்ணு கொலை வழக்கு – உண்மையில் நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment