தமிழ்நாடு சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
நேற்றைய சட்டசபை கூட்டத்தில்பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானிய கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்றது. அமைச்சர் எ.வ. வேலு உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசினார்.
அதற்கு முன்பு அவையின் தொடக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்து உரையாற்றினார்.
அப்போது உரையை ஆரம்பிக்கும் முன்னர் ஸ்டாலின், சட்டமுன்வடிவு மற்றும் கேள்வி நேரத்தில் தலைவர்களை புகழ்ந்து பேச வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
நேரம் குறைவாக இருப்பதால் அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இந்த கட்டளையை பிறப்பிப்பதாக முதல்வர் கூறினார்.
தமிழ்நாடு சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் உரையை ஆரம்பிக்கும் முன்பு பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் என வரிசையாக பாராட்டுவதனை வழக்கமாக்கியிருப்பதால் இது போன்ற புகழ்ச்சி உரையை சட்டமுன்வடிவு மற்றும் கேள்வி நேரங்களில் பயன்படுத்துவதால் நேரம் விரயம் ஆகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.