பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

SHARE

இன்று இந்திய அரசியலில் பேசு பொருளாக உள்ள வார்த்தை பெகாசஸ் உண்மையில் பெகாசஸ் என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறாது காண்போம் இந்த தொகுப்பு.

Pegasus என்றால் என்ன?

முதலில்பெகாசஸ் என்ற வார்த்தை கிரேக்க மொழியாகும் இறக்கைகளுடன் கூடிய குதிரை என்பது இதன் அர்த்தம்

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம் , பெகாசஸ் என்பது ஒருவரின் செல்போனை உளவு பார்க்கும், ரகசியங்களைத் திருடும் மென்பொருள். இந்த மென்பொருளைப் பயன்படுத்துவோர், வெகுதொலைவில் இருந்தே இந்த மென்பொருளை இயக்க முடியும்.

குறிப்பாக ஆப்பிள், ஆண்ட்ராய்ட் செல்போன்களை ஹேக் செய்ய வேண்டும் என்பதற்காகவே பெகாசஸ் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பெகாசஸ் எப்படி வேலை செய்கிறது
பெகாசஸ் ஒரு ஸ்பைவேர் அதாவது ஒருவருக்கு தெரியாமல் அவரை வேவுப் பார்க்கக்கூடிய மென்பொருள்.

இந்த ஸ்பைவேர் ஒருவரது ஸ்மார்ட்ஃபோனில் எந்த தொடுதலும் இல்லாமல் ஊடுருவி தனிப்பட்ட தகவல்களைப் பார்க்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது செல்போனில் இருக்கும் ‘BUG’ மூலம் பெகாசஸ் ஸ்பைவேர் உள்ளே நுழைந்து நமது ஐ.ஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதள ஃபோனில் பெகாசஸ் ஸ்பைவேர் ஒட்டுக்கேட்கவும், மெசேஜ்களைப் படிக்கவும் முடியும்.

இன்னம் சொல்லப்போனால் ஃபோன் கேமரா மற்றும் மைக்கையும் இயக்கவும் முடியும். ஜி.பி.எஸ்.சை தானாகவே இயக்கி, நகர்வுகளைக் கண்காணிக்க முடியும்.

வாட்ஸ் அப்பில் எண்ட் டூ எண்ட் என்க்ஸ்ரிப்ட் எனப்படும் குறியாக்கம் செய்த தகவலைக் கூட பெகாசஸ் பார்க்க முடியும்.

எந்த நாடு உருவாக்கியது?

பெகாசஸ் மென்பொருளை இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பப் பிரிவான என்எஸ்ஓ 2010-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி உருவாகியுள்ளது.

என்எஸ்ஓ அமைப்பின் நோக்கம் என்பது புதிய நவீன தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து, உளவுத்துறைக்கு வழங்குவது.

இந்த பெகாசஸ் மென்பொருள் இன்று இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் பயன்படுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்திய அரசு மறுக்கிறது.

பெகாசஸ் மென்பொருள் மூலம் ஓராண்டுக்கு 500 பேரின் செல்போன்களைக் கண்காணிக்க முடியும். ஓராண்டு இந்த மென்பொருளைப் பயன்படுத்த லைசன்ஸ் கட்டணமாக 70 முதல் 80 லட்சம் டாலர்கள் செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது.

யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள்?

பெகாசஸ் மென்பொருளை எந்தெந்த நாடுகள் பயன்படுத்துகின்றன என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்த மென்பொருள் 2018-ம் ஆண்டு சிட்டிஸன் லேப் அறிக்கையின்படி, இந்தியா, பஹ்ரைன், கஜகஸ்தான், மெக்சிகோ, மொராக்கோ, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட45 நாடுகள் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

இந்திய அரசு பயன்படுத்தியதா?

பெகாசஸ் மென்பொருளை இந்தியா பயன்படுத்தியதற்கான போதிய ஆதாரமான செய்திகள் ஏதும் இல்லை.

ஆனால் 2019 ல் மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வியில் வாட்ஸ் அப்பில் வரும் கால்கள், மெசேஜ்களை அரசு ஒட்டுக் கேட்க அரசு பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்துகிறதா என கேள்வி எழுப்பினார்.

ஆனால் இது குறித்து உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, பெகாசஸ் குறித்து சரியான தகவல் அளிக்கவில்லை.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மீசை கூட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அழகுதான் போல…இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்….

Admin

பேஸ்புக் இந்தியாவின் வருவாய் 9,000 கோடியாக உயர்வு.!!

Admin

டி.வி.இல்லாத வீட்டில் இருந்து கூகுளின் தலைமைப் பதவிக்கு… சுந்தர் பிச்சையின் தன்னம்பிக்கை வரலாறு!

Admin

தாலிபான்கள் பிடியில் ஆப்கான் ..விரைந்தது ஏர் இந்தியா விமானம்!

Admin

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் புதிய அரசு.!!

Admin

பெண்களை மதிப்பவரை நியமியுங்கள்: -ஓபிஎஸ் கோரிக்கை..!

Admin

தடுப்பூசி இல்லை… மத்தபடி கொரோனா எங்க கண்ட்ரோல் தான்…!

Admin

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 8

Pamban Mu Prasanth

தடுப்பூசி போடலைனா சிம் கார்டு இணைப்பு “கட்” …. அரசின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி

Admin

காசிமேடு, திருவொற்றியூரில் கடற்கரையை அழகுபடுத்தும் பணி: தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

Admin

85 நாடுகளில் டெல்டா கொரோனா – உலக சுகாதார அமைப்பு கவலை!

Admin

பருவநிலை மாற்றத்தால் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து…!

Admin

Leave a Comment