இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவிற்கு பொறுப்பு அதிகாரியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார்.
இவர் அங்கு சென்றதில் இருந்து அப்பகுதி மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக இவர் மேல் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
அவர் செய்த மாட்டிறைச்சி தடை, மதுவிலக்கு நீக்கம், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை கலைத்தது போன்ற செயல்களால் அங்கு உள்ள மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் லட்சத்தீவினை சேர்ந்த நடிகை ஆயிஷா சுல்தானாஒரு தொலைக்காட்சி விவதாத்தில் கலந்துகொண்டார்.
அதில் லட்சதீவுகுறித்து விவாதம் சென்ற போது பேசிய ஆயிஷா லட்சத்தீவுகளுக்கு மத்திய அரசு பயோ வெப்பனை அனுப்பியுள்ளதாக பேசினார்.
இது தான் தற்போது சர்ச்சையினை கிளப்பியுள்ளது இதையடுத்து பாஜக தலைவர் அப்துல் காதர் ஹாஜிகாவல் நிலையத்தில் புகாரளிக்க ஆயிஷா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த ஆயிஷா தான் அதிகாரியைதான் பயோ வெப்பன் எனக் கூறினேன். அரசாங்கத்தைப் கூறவில்லை எனக் கூறியுள்ளார்.