உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவை முட்டியளவு கழிவுநீரில் கட்டாயப்படுத்தி பொதுமக்கள் நடக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் அங்கு வெற்றி பெறும் முனைப்பில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் 2017 தேர்தலில் வெற்றி பெற்று தொகுதி பக்கமே இதுவரை போகாத எம்எல்ஏக்கள் கூட மீண்டும் தங்கள் தொகுதியில் தலையை காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் மீரட் மாவட்டத்தில் உள்ள கர்முக்தேஸ்வர் தொகுதி பாஜக எம்எல்ஏவான கமல் மாலிக், தன்னுடைய தொகுதிக்குள் பாதயாத்திரை சென்றுள்ளார்.
அப்போது ஹபூரின் நானாய் பகுதியில் உள்ள கிராமத்தின் வழியாக செல்லும் போது ஒரு இடத்தில் முட்டியளவு கழிவுநீர் தேங்கி நின்றுள்ளது.
வேறு பாதை கிடையாது என்பதால் அதில் இறங்கலாமா வேண்டாமா என கமல் மாலிக் யோசிக்க, இந்த பகுதி பற்றி நீங்களே தெரிஞ்சுக்குங்க என்று சொல்லி கட்டாயப்படுத்தி பொதுமக்கள் அதில் கட்டாயப்படுத்தி இறங்க வைத்தனர்.
இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.
ஆனால் கிராமத்தினரின் கஷ்டத்தை தெரிந்து கொள்ளவே அங்கு சென்று கழிவுநீரில் நடந்தேன் என பாஜக எம்.எல்.ஏ கமல் மாலிக் வழக்கம்போல் சமாலித்துள்ளார்.