நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும்போது நிறைய இடைவெளி இருப்பதாக நடந்த 75வது சுதந்திர தின விழாவில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வருத்தம் தெரிவித்துள்ளார்
சுதந்திர தினத்தை முன்னிட்டு உச்ச நீதிமன்ற வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும்போது போதுமான அளவுக்கு விவாதங்கள் நடத்தாதது மிகவும் கவலை அளிப்பதாக கூறினார்.
மேலும், இது போன்று கொண்டு வரக்கூடிய சட்டங்களில் போதுமான தெளிவுகள் இல்லை என கூறிய தலமை நீதிபதி ,முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் குறித்து விரிவான மற்றும் ஆழமான விவாதங்கள் நடைபெறும்.ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் விவாதமின்றி கொண்டு வரப்படும் சட்டங்களின் நோக்கத்தை நீதிமன்றத்தால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என கூறிய நீதிபதி.
ஏன் இத்தைகைய வகையில் சட்டங்களை உருவாக்குகிறார்கள் என தெரியவில்லை என்றும் சட்டம் இயற்றுதலில் நிறைய இடைவெளி இருப்பதாக கூறியுள்ளார்.
அதே சமயம் வழக்கறிஞர்கள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். அதனால், அறிவார்ந்த வழக்கறிஞர்கள் பொது வாழ்விற்கு வர முடியவில்லை என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசியபோது சுட்டிக்காட்டியுள்ளார்.