அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் ஒரே ஆட்டோவில் குழுவாக அமர்ந்து சென்ற புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக பிரமுகரும், சென்னை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்தாண்டு உயிரிழந்தார்.
அவரின் முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சி சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் ஒரே ஆட்டோவில் பயணம் செய்தனர்.
கொரோனா தளர்வு விதிகளில் தமிழக அரசு ஆட்டோவில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் ஒரே சீட்டில் மூன்று பேர் அமர்ந்து பயணம் செய்திருப்பது விதிகளை மீறிய செயலாகும்.
இதனையடுத்து அது குறுகலான தெரு என்பதால் ஆட்டோவில் சென்றோம் என அமைச்சர்கள் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.