மத்திய அரசால் தடை செய்யப்பட்ட டிக்டாக் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் தடம் பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறியது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
சீனாவின் இந்த தாக்குதலால் சீனா இந்தியா இடையே வர்த்தக தொடர்பில் பூசல் எழுந்தது.
மேலும், இந்தியாவில் புழக்கத்தில் இருந்த டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர் சாட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது மத்திய அரசு.மத்திய அரசின் உத்தரவால் ஏராளமான டிக்டாக் பயனர்கள் சோகத்தில் மூழ்கினர்.
இந்த நிலையில் டிக்டாகின் உரிமை நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம்
அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது அதில் டிக்டாக்கின் பெயர் Ticktock என மாற்றப்பட்டுள்ளது இதனை டெக் மாஸ்டர் முகுல் சர்மா, தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்இதன் மூலம் டிக்டாக் செயலி இந்தியாவில் களமிறங்குவதாக கூறப்படுகிறது.