ஒரு டுவிட்டர் பதிவின் விலை 18 கோடி ரூபாய்!.

SHARE

2006ஆம் ஆண்டில் பதிவிடப்பட்ட ஒரு டுவிட்டர் பதிவு 18 கோடி ரூபாய் மதிப்புக்கு சமீபத்தில் ஏலத்தில் விற்கப்பட்டு உள்ளது!.

கலைப் பொருட்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், ஆட்டோகிராப்புகள் ஆகியவற்றின் வரிசையில் இப்போது இணையப் பதிவுகளும் ஏலப் பொருட்களாகிவிட்டன.

வேல்யுபில்ஸ் என்ற நவீன ஏல நிறுவனமானது இணையத்தில் வெளியான ஒரு குறிப்பிட்ட பதிவின் டிஜிட்டல் சான்றிதழை எழுத்து அதை உருவாக்கிய நபரைக் கொண்டே சரிபார்த்து, உருவாக்கியவரின் கையெழுத்துடன் விற்கிறது. இதற்கு என்.எஃப்.டி. (NFD – Non-Fungible Token) என்று பெயரும் சூட்டியுள்ளது. இதன் மூலம் ஒரு இணையப் பதிவு சான்றிதழ் வடிவிலான கலைப் பொருளாகின்றது.

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி கடந்த 2006ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிட்ட டுவிட்டர் பதிவை சமீபத்தில் இந்த நிறுவனம்  டிஜிட்டல் சான்றிதழாக மாற்றி இணையத்தில் விற்றது. இந்த சான்றிதழ் 29 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் 18 கோடிக்கு ஏலம் போனது. இதனால் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட டுவிட்டர் பதிவு என்ற சாதனையையும் அது படைத்தது.

அதன்பின்னர் இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த தொகையை வேல்யுபில்ஸ் நிறுவனம் பிட்காயின்களாக மாற்றி  ஒரு தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாகக் கொடுத்ததும் குறிப்பிடத் தக்கது!. டிஜிட்டல் யுகத்தின் புதிய பரிமாணத்தைக் காட்டும் சம்பவம் என்று இதை இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

காங்கோ நாட்டில் புதிய தங்க மலை! மக்கள் கூடியதால் பரபரப்பு

Admin

இயல்பு நிலைக்கு திரும்பும் ஆப்கானிஸ்தான்…உள்நாட்டு விமான சேவை தொடக்கம்…

Admin

நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் பூனை.. வைரல் வீடியோ

Admin

செக் வைத்த லண்டன் நீதிமன்றம்.. வசமாக சிக்கிய மல்லையா!

Admin

கொரோனா மூன்றாம் அலை வந்துவிட்டது!: நடுக்கத்தில் தென்னாப்பிரிக்கா!.

காஷ்மீரில் லித்தியம் தனிமம் : இந்தியாவின் பொருளாதாரமே மாறப்போகின்றதா?

Nagappan

பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அமேசான் ஊழியர்கள்!: அதிர வைக்கும் சர்ச்சை

ராணி எலிசபெத்தை கொல்ல விரும்பிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

Admin

தலிபான்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கம்!

Admin

எங்களை கைவிட்டு விட்டுவிடாதீர்கள்… கதறும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்

Admin

தாலிபான்களுக்கு தண்ணி காட்டும் தீவிரவாத அமைப்பு… அதிர்ச்சியில் உலக நாடுகள்…

Admin

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் அடுத்தடுத்த புதிய அப்டேட்கள்..!

Admin

Leave a Comment