ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் இன்று முதல் மாற்றம்..!

SHARE

தமிழகத்தில் இன்று முதல் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும்,பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில், காய்கறிகள்,மளிகைக் கடைகள் மற்றும் இன்றியமையாப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் ரேஷன் கடைகளும் கீழக்காணும் பணி நேரத்தின்படி செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜூன் 8 ஆம் தேதி முதல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்த நேரம் மாற்றம் அமலுக்கு வருவதாகவும், இது மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணைத் தொகை ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினை ஜூன் 15 ஆம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல ஏதுவாக டோக்கன்கள் விநியோகத்தினை ஜூன் 11 முதல் 14 ஆம் தேதி வரை கடைப்பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை டுவிட்டரில் புகழ்ந்த பவன் கல்யாண்.!!

Admin

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு!

Admin

ஜூலை 31 வரை ஊரடங்கு: புதிய தளர்வுகள்என்ன ?

Admin

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

Admin

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை…

Admin

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Admin

கொரோனா கட்டளை மையங்கள் – தொடர்பு எண்கள் வெளியாகின.

நடிகர் ஆர்யா மோசடி செய்யவில்லை… ஜெர்மனி பெண் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் விளக்கம்..

Admin

மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

இளையராஜா பாடல்களில் மயங்கிக் கிடப்பது ஏன்? – கவிஞர் மகுடேசுவரன் சிறப்புக் கட்டுரை.

ஆடி அமாவாசையும் முன்னோர் வழிபாடும்…

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

Leave a Comment