நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பாதுகாவலர், கார் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோர் நாளை நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை கடந்த 5 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி மூன்று முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி, கடந்த 28 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் நோக்கில் தனிப்படை காவல்துறையினர் ராமநாதபுரம் சென்று முன்னாள் அமைச்சரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மணிகண்டனின் பாதுகாப்புப் காவலர், கார் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை அடையாறு அனைத்து மகளிர் கவல்நிலையம் சம்மன் அனுப்பியுள்ளது.