தாயார் மறைவுக்கு உருக்கமாக டிவிட்டரில் பதிவிட்ட தமிழிசை சௌந்தரராஜன்

SHARE

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் கிருஷ்ணகுமாரி, வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவரது உடல் தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்.

என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 04.00 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

”கைலாசா நாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் கிடைத்த விட்டது அன்பர்களே ”-நித்தியானந்தா பெருமிதம்!

Admin

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

”எங்கள் நாடு இந்தியாதான்… நான் மலாலா அல்ல” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை

Pamban Mu Prasanth

இன்று மட்டும் திடீரென்று அதிகரித்த கொரோனா இறப்பு விகிதம் ? காரணம் என்ன?

Admin

டவ்-தே புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கொரோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: வழிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

தடை விதித்த பிறகும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள்… எவ்வளவு தெரியுமா?

Pamban Mu Prasanth

விதிகளின்படி தான் கைது நடவடிக்கை…ஷில்பா ஷெட்டியின் கணவர் அனுப்பிய மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

Admin

முதியவர் தாக்கப்பட்ட விவகாரம் – டுவிட்டர் மீது வழக்குப்பதிவு

Admin

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும்…. +2 பொதுத்தேர்வு ரத்து

Admin

எஸ்.பி.ஐ சேர்மனை நீதிமன்ற காவலில் வைப்பதா? – தேர்தல் நன்கொடை பத்திர விவகாரத்தில் நடப்பது என்ன?

Pamban Mu Prasanth

Leave a Comment