அஞ்சிஅடிபணிவது தமிழர் பரம்பரைக்கே கிடையாது துணிந்து நில் தம்பி: விஜய்க்கு சீமான் அட்வைஸ்!

SHARE

நடிகர் விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்த விவகாரத்தில் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் அன்புத்தம்பி விஜய் அவர்கள், 2012 ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து வாங்கிய மகிழுந்திற்குச் செலுத்த வேண்டிய நுழைவு வரியிலிருந்து விலக்குக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததற்காக அவரை வசைபாடுவதும், பழிவாங்கும் போக்கோடு அவதூறு பரப்புவதும் ஏற்புடையதல்ல. 

தம்பி விஜய் தொடர்ந்து முறையாக வரிசெலுத்தி வரும் நிலையிலும், அரசியல் காரணங்களுக்காக அவரை அச்சுறுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, கடந்தாண்டு அவருடைய வீட்டில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது.

அவர் வரிஏய்ப்பு செய்ததாக எவ்வித ஆவணங்களும் அப்போது வெளியிடப்படவில்லை. அவர் மீது எந்தவொரு வழக்கும் தொடரப்படவில்லை. அவரை அச்சுறுத்தி மிரட்டிப் பணிய வைக்கவும், இனி எவரும் திரைத்துறையிலிருந்து மோடி அரசுக்குக்கெதிராகக் குரலெடுக்கக்கூடாது என்பதற்காகவுமே வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது என்பதை நாடறியும்.

.

பொதுவாக அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் எவரும் நீதிமன்றத்தை நாடமாட்டார்கள் என்ற அடிப்படை உண்மையைக்கூட உணராமல், வழக்குத் தொடர்ந்த ஒரே காரணத்திற்காக, தம்பி விஜயை குற்றவாளிபோல சித்தரித்து அவர் மீது அவதூறுகளை அள்ளிவீசுவது எவ்வகையிலும் நியாயமில்லை. .

“ஏறு ஏறு ஏறு

நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு”

என்று தன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல, தம்பி விஜய் மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வர வேண்டுமென எனது விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அக்னி பரீட்சையாகவே ஆட்சிக்காலம் முழுவதும் அமைந்து விட்டது- எடியூரப்பா கண்ணீர்

Admin

இயங்காத வெண்டிலேட்டர்கள்: மக்கள் உயிரோடு மத்திய அரசு விளையாட்டா?

ஜெயலலிதா அறையை பயன்படுத்தும் மு.க.ஸ்டாலின் – டெல்லி பயணத்தின் சுவாரஸ்யங்கள்

Admin

திருமாவளவனும் பா.ஜ.,வை ஆதரிப்பார்- பா.ஜ., இப்ராஹிம்

Admin

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நாளை காபூல் பயணம்!

Admin

தலைவரும் நானே… பொதுச் செயலாளரும் நானே… மநீம கட்சியில் மாற்றங்களை அறிவித்த கமல்!

Admin

RSS மதவாதிக்கு அரசு செலவில் வரவேற்பா?! திமுக அரசிடம் கொந்தளிக்கும் எம்பிக்கள்!

Admin

தீபாவளிக்கு வீட்டுக்கு 1.5 டன் ஆவின் ஸ்வீட் பார்சல்.. சிக்கலில் முன்னாள் அமைச்சர்!

Admin

ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது :டாக்டர் கிருஷ்ணசாமி !

Admin

சோனியாகாந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Admin

‘‘நீட் தேர்வு எனும் அநீதியை போக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ – ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கும் கே.எஸ். அழகிரி

Admin

உங்க உதவிய அமெரிக்கா மறக்காது.. : ஆண்டனி பிளிங்கன்

Admin

Leave a Comment