கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் கொந்தகை தளத்தில் குத்துவாள் கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடி ஏழாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது.
அங்குள்ள கொந்தகை தளத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு 25 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.
11 முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டு, அதிலிருந்து பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே முதுமக்கள் தாழியில் இரும்பு வாள் கண்டறியப்பட்ட நிலையில், 46 செ.மீ நீளமுள்ள குத்துவாள் கிடைத்துள்ளது.
இதுவரை உறைகிணறுகள், வெள்ளி நாணயம், பவழம், உழவு கருவி, பானைகள், பானைஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்