சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 6: தொழிற் கை முத்திரையின் வகைகள் (13 – 16)

SHARE

நமது ‘சிற்ப இலக்கணம்’ தொடரில் இதுவரை, 24 வகையான தொழிற் கை முத்திரைகள் எவை என்று சுருக்கமாகவும், அவற்றில் முதல் 12 முத்திரைகளை விளக்கமாகவும் கண்டோம். மீதமுள்ள முத்திரைகள் குறித்து தொடர்ந்து காண்போம்

13. அர்த்த சந்திர ஹஸ்தம்.

அரை நிலா போன்ற தோற்றம்.

சுட்டுவிரல் முதல் சிறுவிரல் வரை உள்ள நான்கு விரல்களையும் ஒன்றோடொன்று ஒட்டியமைத்து, கட்டை விரலை அவற்றிலிருந்து பிரித்து  விரைப்பாக எதிர்புறம் நீட்டி அமைந்த முத்திரை. இதை சமமட்டத்தில் செங்குத்தாக பிடிக்காமல் வானத்தை நோக்கி சிறிது சாய்த்து பிடிக்கின் அரைசந்திர வடிவம் தோன்றும். ஆடவல்லான் படிமத்தில் இடது மேற்கரத்தில் தீச்சுடர் ஏந்திய முத்திரை அர்த்த சந்திர ஹஸ்தமாகும்.

14. அர்த்த பதாக ஹஸ்தம்.

சுட்டு விரலையும் நடுவிரலையும் விரித்து நீட்டி மற்ற விரல்களை முன்னோக்கி மடக்கி கைத்தலத்தையும் விரலையும் செங்குத்தாகப் பிடித்த அமைப்பு இதுவாகும். ஜீவாத்மா, பரமாத்மா இவ்விரண்டும் வெவ்வேறானவை என்பதை உணர்த்தும் குறியீடு. இம்முத்திரையை மத்துவாச்சாரியின் கையில் காணலாம்.

அர்த்த பதாக ஹஸ்த முத்திரையுடன் ரிஷ்ய சிருங்கர் ..

15. திரிசூல ஹஸ்தம்

கைத்தலத்தையும் விரல்களையும் செங்குத்தாக நீட்டி நிறுத்தி சிறு விரலையும் பெருவிரவையும் கைத்தலத்திற்கு முன்புறம் கொணர்ந்து மடக்கி ஒன்றையொன்று தொட்டிருக்க மற்ற மூன்று விரலும் தொடாமல் விலகி மேல்நோக்கி நிமிர்ந்து நிற்கும். இது மூன்று பொருளை உணர்த்தும்.

அவை பசு, பதி, பாசம் என்ரு கூறப்படுகின்றது. நாம் அதை அறம், பொருள், இன்பம் எனவும் கொள்ளலாம். திருவள்ளுவர் படிமங்களில் இம்முத்திரை இருக்கும்.

16. முஷ்டி ஹஸ்தம்

பெருவிரல் தவிர்த்து மற்ற விரல்களை ஒரு சேர மடக்கி உள்ளங்கையோடு சேர்த்து இறுக்கிப் பிடித்து நடுவிரல் மீது பெருவிரலை பொருத்தி அமையும் முத்திரை இதுவாகும். தண்டம், வாள், போன்ற ஆயுதங்களை இறுக்கிப் பிடித்தலை இது காட்டும்.

தொடரும்…

  • மா.மாரிராஜன்

ativador office 2013


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள். நாள்: 8 தலைவர்… நாமினேஷன்… சூடுபிடித்த ஆட்டம்

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 8: தொழிற் கை முத்திரையின் வகைகள் (20 – 24)

காஞ்ச அய்லய்யா எழுதிய ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ – நூல் அறிமுகம்!.

இரா.மன்னர் மன்னன்

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் – நூல் மதிப்புரை

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

Admin

தற்குறி – என்றால் என்ன?

தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Pamban Mu Prasanth

உதடுகள் ஒட்டும் குறளும் ஒட்டாத குறளும்…

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள்: 21 “அபிஷேக் அவுட்”

இரா.மன்னர் மன்னன்

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 6

Pamban Mu Prasanth

Leave a Comment